Friday, June 30, 2023

பவுல் சாட்சி - ஏசு இறந்த பின் உயிர்த்து பழைய உடம்பில் மீண்டும் காட்சி தந்தாரா? எல்லாவற்றையும் வரலாறு ஆசிரியர் நிராகரிப்பது ஏன்?

பவுல் மாற்றக் கதை

ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் என்ன செய்தனர்? 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

ஏசுவுடனே தங்கி அவர் போதனைகளை கேட்ட அந்தக் கூட்டச் சீடர்கள் அனைவரும் ஓடினர், ஒருவன் துணியை விட்டு அம்மணமாக ஓடினார் எனில் - ஏசு பெரும் நம்பிக்கை தரும்படி செய்யவில்லை- இந்த சீடர்கள் ஏதும் புரிந்து கொள்ளவில்லை என்பதும் உறுதி ஆகும்

பவுல் எழுதிய 7 கடிதங்களே புதிய ஏற்பாடு புராணங்களின் முதலில் வரையப்பட்டவை. 

1கொரிந்தியர் 15:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது மரன தண்டனையில் சிலுவையில் இறந்த கிறிஸ்து கதையை. இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.  
ஏசு எந்த அதிசயமும் செய்யவில்லை, அவர் மீது தான் தீர்க்க தரிசனம் நிறைவேறியது என்பதும் இல்லை என மேலுள்ள வசனம் உறுதி செய்கிறது
பவுல் ஏசு இறந்த பின்னர் மீண்டும் வந்து காட்சி எனக் கூறிய கதை
1கொரிந்தியர் 15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் 
கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: விவிலியத்தில் எழுதி ள்ளவாறு
கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4 அடக்கம் செய்யப்பட்டார்.
விவிலியத்தில் எழுதி உள்ளவாறே 3ம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.
5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.
பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின்  அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார். 8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். 
 பெற்றுக்கொண்டதும்-செவிவழியாக கேள்விப் பட்ட கதை;
ஒப்படைத்ததும் - பரப்பிய கதை
அடக்கம் செய்யப்பட்டார்- மரணமடைந்த யாருக்குமே இது தான்
இதில் என்னிடம் இவர் சொன்னார்- நம்பிக்கைக்குரிய பெயர் ஏதும் இல்லை.  
5-8   கேபா -பேதுரு; பன்னிருவருக்கும்- யார் இது, யூதாஸ் தூக்கு போட்டு மரணம்(மத்தேயூ) அல்லது உடம்பு ஊதி வெடித்து மரணம் (அப்போஸ்தலர் நடபடிகள்)
மேலும் - 7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின்  அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்.   யாக்கோபு;   கேபா(பேதுரு) இருவரும் 12 அப்போஸ்தலர் தானே
பன்னிருவருக்கும்- அப்போஸ்தலருக்கு- வேறுவேறு குழுவா?
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் -பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.  பெயர் ஏதும் இல்லை.

இங்கே பவுல் இறந்த ஏசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு காட்சி எனக்  கூறிய அனைவருக்கும் ஒரே கிரேக்க சொல் தான் - அதாவது அனைவரும், கண்டனர், காட்சி பார்த்தனர்-என்பதே; மற்றபடி பேசினார், மீன் சாப்பிட்ட்டர் கதை எல்லாம் இல்லை, இது ஏசு மரணதண்டனையில் இறந்து சுமார் 30 வருடம் பின்னர் சுற்றில் இருந்த கதை. 
பவுல் ஜெருசலேம் வந்து அப்போஸ்தலர் யாக்கோபை சந்திக்க தங்கள் சர்ச் சேர்ந்த நான்கு உறுப்பினர் ஜெருசலேம் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனாக தூய்மை செய்து மொட்டை அடிக்க உள்ளனர், (அப்போ 21:23- 24) நீங்கள் உடன் சென்று பரிகாரம் செய்து மொட்டை செலவை ஏற்கக் அனுப்பினர். 
பவுலை யூதர்கள் பிடித்து கைது விசாரணை எனக் கதையில்- யாருமே பவுலிற்கு ஆதரவாக சாட்சி சொல்ல வரவில்லையே? ஏன்?  பவுல் கைது விசாரணை நடந்த போது(பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்)  இவர்கள் யாரையும் அழைக்கவும் இல்லை; ஏசுவின் 12 சீடர்கள்  ஏன் கைது செய்யப் படவில்லை. அந்த சீடர்கள் இவரைக் காப்பாற்றவும் இல்லை. 

பவுல் இறந்தபின் ஏசுவின் காட்சி கண்டு பெற்ற செய்திப் படி உலகம் அவருடைய வாழ்நாளில் அழியும் என்பதை அழகாக விளக்கியும் உள்ளார்  

 கலாத்தியர் 1:12 நான் இந்த நற்செய்தியை எந்த மனிதனிடம் இருந்து பெறவில்லை. யாரும் கற்பிக்கவில்லை. ஏசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். 
ஏசுவிடம் பவுல் பெற்றதாகப் பரப்பிய தெய்வீக போதனை
1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.   
பவுல் இந்த கர்த்தரின் நாளில் எப்படி என்ன நடக்கும் என்றது 
1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில் ம்  அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது  இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம்
 No belief is more characeristic of Paul or more fundamental to every thing he wrote and did than his belief that the World was very soon coming to end. It is the absolute foundation of his thought. A reader who misses this point can understand very little else about Paul.
Page- 244 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press
It never occured to Paul that Parousia or 2nd coming (the Day of Jesus Christ Phil1:6) might be postponed beyond his own age in the distant hardly imaginable future as the Church eventually had to acknolege. 
Page- 245 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press
நாம் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு போதனையும் அப்படியே உள்ளது எனக் காண்கிறோம் 
மத்தேயு11:13 ஏசு- நியாயப்பிரமாணம் & தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
லூக்கா7: 27 ஏசு- இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என யோவானைப் பற்றித்தான் விவிலியக் கதை நூலிகளில் எழுதப்பட்டுள்ளது.  
யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார் 
மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசிகளும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் நடக்கவிருந்த செயல்களை உரைத்தன.    
லூக்கா16: 16 மோசே சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
எலியா தீர்க்கதரிசி வந்தால் உலகம் அழியும் கர்த்தரின் நாள் முன் அந்தத் தலைமுறையில் ன்ன  நடக்கும்    
 மல்கியா4:1 நியாயத் தீர்ப்புக்கான காலம் வருகின்றதுஇது ஒரு வெப்பமான சூளை போன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப் படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப் படுவார்கள். அதிலுள்ள கிளையோ, வேரோ விடுபடாமல்போகும்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
 5 கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான்.
 கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாள் - என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?  
 யோவேல்1:15துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய  நாள் அருகில் இருக்கிறது. எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்
எலியா தீர்க்கதரிசி  மீண்டும் வருவது என்பது உலகம் அழியும் கர்த்தரின் நாள்  அந்தத் தலைமுறையில் நடக்கும் எனக் கதை. எலியா வந்த உடனே ஆன அந்த தலைமுறையில் என்ன நடக்கும் என பழைய ஏற்பாடு கதைகள் 
யோவேல்2:30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு, அடர்ந்த புகை போன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.
 ஏசுவும் இதே வார்த்தைகளை சொன்னதாகக் கதை
மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன். 24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, ‘சூரியன் இருளாகும்.   சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.  வானில்  உள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள்.
மாற்கு 13:30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.  இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்து கொண்டு  ருக்கும் போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 
உலகம் அழியப் போகிறது என்ற ஒரு சிறு யூதப் பிரிவின் மூடநம்பிக்கையே உலக இறுதி தலைமுறையில் யூதர்களின் ராஜா எனும் கிறிஸ்து வருதல் என்பது, அப்படி வந்து இருந்தால் அப்போதே உலகம் அழிந்து இருக்கணும். எல்லாமே ஒரு மூட நம்பிக்கை. 
பவுல் தான் யாரை தன் வசம் இழுத்தார் எனப் பார்த்தால்  
1கொரிந்தியர் 1: 26 சகோதர சகோதரிகளே, நீங்கள் இணைந்த நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதச் சமுதாய வாழ்வில் உங்களுள் அறிவாளிகள் எத்தனைபேர்? வலிமையானோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? 
சமுதாயத்தில் கீழ்நிலை மக்கை ஏமாற்றி சர்ச் அடிமையாக்கி 10% வருமானம் - தசம பாகம் எனப் பிடுங்கக் கூறப் சுவிசேஷக் கதைகள் வெற்று கற்பனையே

Wednesday, June 28, 2023

சுவிசேஷக் கதைகளில் ஏசு பேசியதாக- தன்னிச்சையாக சுவிசேஷக் கதாசிரியர்கள் சேர்ப்பதும் & நீக்குவதும்

ரோமன் அரசு -தனக்கு எதிராக கிளம்பிய யூதர்களின் மேசியா-ராஜா எனச் சொல்லித் திரிந்த ஏசு என்ற மனிதனை மரணதண்டனையில் கொன்றது. இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகம் ஆக்கி வழிபடுவதே கிறிஸ்துவ மதம். 



சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார்,  பொஆ.70 வாக்கில் முதலில் வரைந்த மாற்கு சுவி கதையின் 5-6ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகள் எல்லாமே 16:8 என்ற வசனத்தோடு முடிகிறது. நாம் முக்கியமாக 7-8ம் வசனம் பார்ப்போம்.

வெள்ளி அன்று மாலை செத்துப் போனதான ஏசுவின் பிண உடல் கல்லறையில் அடக்கம் செய்தனராம், சனிக்கிழமை (கர்த்தர் ஓய்வு நாள்) விட்டு த்த 2ம் நாள்  ஞாயிறு  காலை அன்று ஏசு இயக்கம் சேர்ந்த சில பெண்கள் இறந்த ஏசுவின் பிண உடலுக்கு வாசனை தைலங்கள் தடவச் சென்றபோது  

மாற்கு 16:7 கல்லறையில் இருந்த வெள்ளை உடை வாலிபன் " ஏசுவின் சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். ஏசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கு இருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி* நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

 8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. * refer that Jesus saying below


இக்கதை தான் இறந்த மனிதன் ஏசு இறந்தார் எனப் பட்ட பிறகு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு காட்சி தந்தா கதைகளின் ஆரம்ப நிலை.

//*ஏசு உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி* நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்”// 

 

மாற்கு 14:28 ஏசு தன் சீஷர்களிடம்," மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கே இருப்பேன்” என்றார். 

5 - 6ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து கிரேக்க மாற்கு மூல ஏடுகளில் இறந்த ஏசு  மீண்டும் பழைய உடம்பில் காட்சி ஏதும் இல்லை, ஆனால் கலிலேயாவில் காட்சி தருவதாக் தான் கைது ஆவேன் என்ற போதே சொன்னதாகக் கதை.   

இறந்த ஏசு  மீண்டும் பழைய உடம்பில் காட்சி கதைகளைக் கூறும் மற்ற சுவிசேஷங்களில் ஏசு சொன்ன இவ்வசனம் உள்ளதா காண்போம்.              நாம் மத்தேயு சுவிசேஷக் கதையில்  இறந்த ஏசு  மீண்டும்    பழைய உடம்பில் உயிரோடு எழுந்து சீடருக்கு காட்சி கதை கலிலேயாவில் (28:16-17) மட்டுமே 

மத்தேயு 26: 32 ஏசு தன் சீஷர்களிடம்  நான் இறந்தபின்,  மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கே இருப்பேன்” என்றார். 

நாம் லூக்கா சுவிசேஷக் கதையை முழுவதும்  ஆராய்ந்தால் -றந்த ஏசு  மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுந்து சீடருக்கு காட்சி கதை ஜெருசலேமில் மட்டுமே , இறந்த 2ம் நாள் ஞாயிறு அன்றே ஏசு பெத்தானியாவில் இருந்து பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்ட்தாகக் கதை  

 இயேசு பரலோகத்திற்குத் செல்லுதல்

லூக்கா 24: 50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்கள்   டமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர்.   பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் லயத்தில் தங்கி இருந்தார்கள். 

லூக்கா கதாசிரியர் காட்சிகளை ஜெருசலேமில் மட்டுமே வைத்ததால் - ஏசு தன் கைது பற்றி முன்பே சொன்னார் எனும் புனைக் கதையில் 22:14 - 38 முழுவதிலும் கலிலேயா சென்று அங்கே காட்சி என்பது சொல்லவே இல்லை

யோவான் 4ம் சுவிசேஷக் கதையில் இரவு உணவு என்பது இல்லை - ஆனால் தன் கைதை முன்பே கூறியதாக உள்ள 13ம் அத்தியாயத்தில் நிச்சயமாக கலிலேயா செல்லுவேன் என்பது சொல்லப் படவே இல்லை. 

பிற்கால யோவான் சுவி - 2ம் நூற்றாண்டில் காட்சிகளை ஆரம்பத்தில் ஜெருசலேமில் தான் எனக் கதைச் செய்ததோடு - பிற்கால சொருகலாக சேர்ந்த கடைசி அதிகாரத்தில்; ஏசுவை தெய்வீகர் என ஏற்ற சீடர்கள் ஏசு இறந்தபின்,  பழைய உடம்பில்   உயிரோடு ஜெருசலேமில் காட்சிக்கு பின்பும்  மீண்டும் கலிலேயாக் கடற்கரை வந்து பழைய மின் பிடி தொழிலை செய்தபோது கலிலேய ஏரியில் காட்சி மற்றும் மீன் பிடி அதிசயம் கதைகள் சேர்த்தனர்.

லூக்கா 5:சு போதித்து முடித்து; சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்... 6 மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. 7 பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவ; இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும்   நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.  

கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் போது ஏசு அதிசயம் செய்ததைப் பார்த்து தான் பீட்டர் சீடர் னார் என்பது லூக்கா(5:1-10) சுவிசேஷக் கதை  

 யோவான் சுவிசேஷக் கதையின் கடைசி அத்தியாயம் - சர்ச் பீட்டர் தலைமை தொடர்ச்சி என்பதை கொணர 3 முறை என் மந்தையைப் பார்த்துக் கொள் என ஏசு கேட்டுக் கொண்டதாக கதை புனைந்தார் என்பதும் முதல் அத்தியாயத்தில் ஏசு கலிலேயக் கடலில் பேதுருவைச் சேர்த்துக் கொண்டார் என்பதை மாற்றி  யூதேயாவில் யோவான்ஸ்நானன் தேவ ஆட்டுக்குட்டி என்பதற்கு பீட்டர் சாட்சி என மாற்றி விட்டனர்   என பைபிளியல் (Collegeville Bible Commentary - Edited by Diana Bergant & Robert J Karris, 1989, and article on 4th Gospel of John is by Neel M Flanagan; and the book has Nihil obstat & Imprimatur)  அறிஞர் கருத்து. 

The Conviction of Jesusby a Roman Governor and his death by a Roman form of Capital Punishment – Crucifixion were facts about the accounts of Jesus given by the Christians. They were an embarrassment to those who sought to stop the Roman Persecution of Christianity. This may well have influenced the way in which the Trials of Jesus were presented to the readers of the gospels. The Council of Jews, the Sanhedrin, was described as morally responsible for the sentence of death pronouncement by Roman Governor. But Pilate may well have been influenced by alleged intention to destroy the Temple – Page:127. Who’s Who in the NT 

ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் கைதான போது என்ன செய்தனர்?  

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

இப்படி செய்ததில் வரலாற்று ஏசு என்பது சுவிசேஷக் கதையில் உள்ளவை எதிலும் இல்லை என்பது பைபிளியல் அறிஞர்கள் கருத்து.
நாம் ஒரு பேச்சை நன்கு புரிந்து அதன் படி நடக்கும்போது தான் அவை நினைவில் இருக்கும், எதையுமே புரியாமல் தப்பித்து ஓடிய சீடர் போதனைகளை பரப்ப, 2 தலைமுறை பின்பு சுவிசேஷத்தில் வரையப் பட்டன என்பதை நேர்மையான சிந்தனையாளர் யாருமே ஏற்க இயலாது

Monday, June 26, 2023

யூதாசு மரணம் எவ்வாறு? சுவிசேஷங்கள் கட்டுக் கதைகள் என நிருபிக்கின்றதே!

சுவிசேஷக் கதையின் நாயகன் ஏசு தன் ஆட்சியில் யூதர்களின் 12 ஜாதியை நீதி பரிபாலனம் செய்ய 12 சீடர்கள் என்பதில் ஒருவர் யூதாசு இஸ்காரியோத்து.  


மத்தேயு 19:28 ஏசு தன் 12 சீஷர்களிடம், “ புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமரநீங்கள் பன்னிரெண்டு அரியணைகளில் அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்". 

சீஷர் யூதாசு தான் ஏசு ரோம் ஆட்சியினருக்கு காட்டிக் கொடுத்தாராம்.   யூதாசு மரணம் பற்றிய கதைகளை பார்ப்போம். 

மத்தேயு -யூதாஸின் தற்கொலை 

மத்தேயு 26: 3 ஏசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் ஏசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே 4 யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான ஏசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்து விட்டேன்” என்றான். அதற்கு யூதத்  பாதிரிகள் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள். 5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக் கொண்டு இறந்தான்.   

மத்தேயு கதையின்படி இயேசுவின் மரணத்திற்கு  முன்பே தான் வாங்கிய காசைத் தூக்கி எரிந்து தூக்குப் போடு தற்கொலையில் இறந்தார்

அப்போஸ்தலர் நடபடிகள் கதை 

அப்போஸ்தலர் 1:18  இயேசுவை காட்டிக் கொடுக்க  செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. யூதாஸ்  அப்பணத்தில் ஒரு நிலத்தை வாங்கினான். ஆனால்  தலைகுப்புற வீழ்ந்து யூதாஸ் சரீரம் வெடித்து சிதறி பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது.   

அப்போஸ்தலர் நடபடிகள் கதாசிரியர் -லூக்கா கதையின்படி இயேசுவின் மரணத்திற்குப் பின்னர்   யூதப் பாதிரிகள் தந்த காசில் தானே வாங்கிய நிலத்தில் உடல் பெரிதாக தலை குப்புற விழுந்து  இறந்தார்  என கதை. 

இப்பதிவை இந்த இடத்தில் நிறுத்தி பதில் தர,  பாசீச கிறிஸ்துவ மதவெறி பாதிரி ஒருவர் - தன்னுடைய பழைய வலைப்பூவில் இதற்கு பதில் உள்ளது எனவும் அதில் உங்களுக்கு பதில் உள்ளது எனப் பதித்தார்; முகநூல் பதிவு, அவர் வலை பக்க படங்கள்   

நாம் அந்த இரண்டு வசனத்தோடே முடித்து ;இது போல விபச்சாரத்தன மழுப்பலிற்காக FB இணைப்பு தர- வந்து விட்டது, இப்போது முழு பதிவையும், அடுத்த வசனங்கள் தந்து முடிக்கிறோம்  

யூதாஸின் தற்கொலை

 மத்தேயு 27: 3 ஏசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டு வருந்தி ; னக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் யூதத் தலைமைப் பாதிரியிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துத் தர;  அதற்கு யூதப் பாதிரிகள் ஏற்கவில்லை. 5 யூதாஸ் பணத்தை யாவே தெய்வ ஆலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக் கொண்டு இறந்தான். 

6 வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமைப் பாதிரிகள், யாவே தெய்வ ஆலய நிதியில் சேர்க்காமல் 7 அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கிட, அந்நிலம் எருசலேமைக் காண வரும் யூதர் அல்லாத பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. 8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப் படுகிறது. 9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.

லூக்கா சொல்லும் கதை 

 அப்போஸ்தலர் 1:18 ஏசுவைக் காட்டிக் கொடுப்பதற்கு செய்வதற்கு யூதாஸிற்குப் தரப்பட்ட பணத்தில் ஒரு நிலம் வாங்கிட; யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் இதை அறிந்திட -அந்த   நிலத்திற்கு “அக்கெல்தமா” - “இரத்த நிலம்” என்று பெயரிட்டனர்.

விபச்சாரத்தன மழுப்பல் வாதம்- அந்த நிலத்தை யூதப் பாதிரிகள் தான் வாங்கினர் - லூக்கா சுவிசேஷக் கதாசிரியரின் இரண்டாவது நூல் ஆன அபோஸ்தலர் நடபடிகள் வசனம் நாம் தந்தது -அதன் 10க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் படம் இத்தளத்தில் இருந்து தருகிறோம்
https://www.biblestudytools.com/acts/1-18-compare.html
ன்னிடம் உள்ள 8 பதிப்புகள் எல்லாமே யூதாஸ் அந்தப் பணத்தில் நிலத்தை வாங்கினார் எனத் தான் உள்ளது

நாம் இங்கே ஆர்சி-அருள்வாக்கு தள மொழிபெயர்ப்பு -இணைப்பு, ஸ்கிரின் எல்லாம் தந்து உள்ளோம் 

 திருத்தூதர் பணிகள் 1: 18 யூதாஸ் தனது செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின. 

https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=1 

நண்பர் மத்தேயு ஏசுவின் நேரடியான சிஷ்யர், அவர் யூதாஸ் தற்கொலை மற்றும் நிலத்தை அவர் வீசிய காசில் யூதப் பாதிரிகள் நிலம் வாங்கினர் என்பதை மட்டுமே ஏற்பேன்- லூக்கா அப்போ.நட. கதையை ஏற்க மாட்டேம் என மதவெறி மலிவு மழுப்பல் வாதம் வைக்கிறார். 
உலகம் முழுவதும் உள்ள பைபிளீயல்/ வரலாற்று ஆசிரியர் கருத்து ஒற்றுமை- புதிய ஏற்பாடு புராண 27 நூல்களில் ஒன்று கூட நேரடி சாட்சியோ ஏன் சீடரோடான நேரடி விபரம் பெற்றவர் எழுதியது இல்லை. 
நாம் மத்தேயூ பற்றி 
பேராசிரியர் F.F.Bruce கூறுவது -The conclusion usually (and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or somthing very like it) served as the source for the Gospel of Matthew and Luke, and that these two also has access to a collection of sayings of Jesus(conventionally labeleed 'Q') which..... Page -25; The Real Jesus
Now to proves consensus I take a Book with- Nihil Obstat and Impriamtur - "Who's Who in the New Testament" 
It seems that Mark's Gospel was the first published accout of the life, work and death of Jesus and it soom became accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke; and was also known to the writer of the 4th Gospel. Page -178
But its(Gospel accordingto Matthew) contents seem to show it to be the work of neither of an Apostle nor of an Eye- witness. Page -195 
இந்திய கிறிஸ்துவ சுவிசேஷ பரப்பு மன்ற(ISPCK) நூல்- The Words of and Works of Jesus பார்த்தால், பேராசிரியர் A.M.Hunter  கூறுவது - To Mark's Narrative Matthew adds historically dubious stories of the earthquake and resurrection of the Jewish saintsand the Sealing of the Tombs- Page-133
Matthew 1:18-25 comes from "M" not a very reliable Gospel stratum. Page- 32.
கிறிஸ்துவ மத சர்ச் உள்ளே பாதிரி அப்பாவி மக்களைப் பிடித்து வைக்க கூறும் பொய்களை - வரலாற்று தேடல் விவாதத்தில் வைப்பது கீழ்த்தரமான மழுப்பல் என்பதைவிட பைத்தியக்காரத்தனம் எனலாம்.
A Great deal of Confusion remains in the Gosple stories and much in them will not bear comparison with established Judicial Practice(Jewish & Roman) of the time..
Many Scholars believe that these elements of the 'story'(Sanhedrin meet, Barnabbas, Herod, etc.,) reflect the Anti-Jewish circles of early Christians, perhaps those in the Hellenistic circles,  and their desire to absolve the Romans from the guilt of the death of their Saviour page-  Page- 454, Pictorial Biblical Encyclopedia
..Many Scholars maintain that by the time Mark and Matthew (Ch.26 &27) wrote their accounts, there was no living witness to what had taken place after Jesus Arrest.// Page- 453 
, Pictorial Biblical Encyclopedia
நண்பர் தன்னுடைய மூடநம்பிக்கையை வலியுறுத்த தான் மத்தேயு கதையை வரலாறு எனவும், லூக்கா (அப்போ1:18) கதை சற்றே திரிந்து விட்டதாகவும் கூறினார். பிறகு 21ம் நூற்றாண்டு பாசீச கிறிஸ்துவ மதவாத மழுப்பல் வலைதள அகராதியைக் கொண்டு அதை வைத்து தன் மூடநம்பிக்கையே சரி எனக் கதைத்து உள்ளார். பல புதிய ஏற்பாடு புராண சொற்களை நாம் காண்கையில் இதே வேலையை செய்து உள்ளதால் நாம் இதை அறிவோம். 
சுவிசேஷக் கதாசிரியர் அவர் காலத்தில் பயன்படுத்தியப் பொருளை நேர்மையாக கூறணும். சொற்கள் பொருள் காலம் தோறும் மாறக் கூடும். உதாரணமாக நாம் இரு பண்டைத் தமிழ் சொற்களை- "நாற்றம் & கழகம்" என்பதை சன்ங்க இலக்கியம் முதல் திருக்குறள் வரை கண்டால் நாற்றம் என்பது தெய்வீக மணம் எனப் பொருள்; இது கேட்ட வாசனை என 12ம் நூற்றாண்டிற்கு பின் இலக்கியத்தில் மாற்றம்; கழகம் என்ற சொல்- குடி கெடுக்கும் சூதாடிகள் கூடும் இடம் என கலித்தொகை, திருக்குறளில் உள்ளது; இதுவும் பிற்காலத்தில் மாறியது' பல்கலைக் கழகம் என நல்ல விஷயத்திற்கு மாறியது. நாம் இந்தப் பாடல்களுக்கு நூலாசிரியர் காலப் பொருள் தான் எடுக்க வேண்டும்.
அப்போஸ்தர் (திருத்தூதர் பணிகள்) நடபடிகள் எழுதப்பட்ட காலத்தில் உள்ள கொய்னைன் கிரேக்க மொழி பெயர்ப்பு தான் பெரும்பாலான பைபிள் பதிப்புகளும். 
நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம்.  இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலைகளஞ்சியம் கூறுவது. 
மாற்கு6:3 ஏசு தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America  
ஆனால் கன்னி மேரி என்ற நம்பிக்கை உள்ளதால்- இச்சகோதர, சகோதரிகள் என்பதை- நேரடி உடன் பிறந்தவர் அல்ல என்பது இன்றைய சர்ச் பரப்பல். ஆனால் பைபிளியல் அறிஞர்கள் மூல கிரேக்கத்தில் அப்படி இல்லை எனத் தெளிவாக பதித்து உள்ளனர். எனவே தான் எப்போதும் பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை என்பதை தெளிவாகக் காட்டுகிறோம். 
யூதாஸ் மரணம் பற்றிய பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை
விவிலியத்தின் ஆங்கிலப்  & தமிழ் பதிப்புகள்- பல நாடுகளில் பல கோடி மக்கள் கையில் செல்லும் என்பதால் மொழி பெயர்ப்பாளர்கள் மிகவும் கவனமாக செய்வர். ஆனால் முழுமையான மழுப்பல் அகராதி மட்டுமே கொண்டு தன் நாசிய கிறிஸ்துவ மதவெறி கொண்டு பாசீச பைபிள் கதைகளின் முரண்களை சரி என வாதிடுவதை நடுநிலை பன்னாட்டு பைபிளியல் அறிஞர்கள் ஏற்பது இல்லை.
நிஜங்கள்  - விவிலியம் பற்றிய கேள்வி பதில்கள் அருட்திரு தெயோபிலஸ்.ச.ச
இந்த நூல் - இரண்டு பேராயரிடம் Nihil Obstat & Imprimatur பெற்றது.  
த்தேயு சுவிசேஷக் கதாசிரியர் பழைய ஏற்பாடு அகிதோபல் தற்கொலைக் கதையை யூதாஸ் மேல் போட்டு இருக்கிறார் எனும் பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை கூறி; யூதாஸ் மரணம் எப்படி எனத் தெரியாது என்கிறார்.
நாம் பன்னாட்டு பைபிளியல் அறிஞர்கள் யூதாசு தற்கொலைக் கதை பழைய ஏற்பாட்டில் இருந்து வெட்டு - ஒட்டப்பட்டது என்பதை விபரமாகப் பார்ப்போம்
 2 சாமுவேல் 16: 21 அகிதோபல் (ஆலோசனை தரும் தீர்க்கர் எனக் கருதப் பட்டவர்) அப்சலோமிடம், “உன் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உடல் உறவு கொள்...உன்னோடு இருப்பவர் அனைவரின் கை ஓங்கும்” என்றான். 22அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அமைக்கப் பட்டது. இஸ்ரயேலர் அனைவரும் அறிய, அப்சலோம் தன் தந்தை தாவீதின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.
2 சாமுவேல் 17: 1 அகிதோபல் அப்சலோமை நோக்கி, “நான் 12000 ஆள்களைத் தேர்வு செய்து இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின்தொடர்வேன். 2அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர்மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடிருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்; அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன்.
இந்த அறிவுரை ஏற்கப் படவில்லை - தாவீதிடம் அப்சலோம் தோல்வி உறுதி, தன்னை தாவீது கொல்லும் முன்பாக தானே தூக்கு போட்டு இறந்தார் எனக் கதை.
அகித்தோப்பேல் தற்கொலை 
2 சாமுவேல் 17: 23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டு;  நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்று தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, அகிதோபல் தூக்கு போட்டுக் (தற்கொலை) கொண்டான்; ஜனங்கள் அவனை புதைத்தார்கள். 
யூதாஸ் யார் - புதிய ஏற்பாட்டில் ஏசுவின் சகோதரன் ஒருவன் பெயர் யூதா. சீடர்களில் 3 யூதா உள்ளனர், யூதாஸ் தோமா,  யூதாஸ் ததேயு மற்றும் யூதாஸ் இஸ்காரியோத்.
மூவரா- ஒருவரையே மூவராக கிரேக்க கதாசிரியர்கள் குழப்பினரா என்பதிலும் பைபிளியல் அறிஞர்களிடம் கருத்து உண்டு.
சீடர் பட்டியலில் உள்ள - கடிதங்கள் எழுதிய ருவர் யாக்கோபு, யூதா  ஏசுவின் சகோதர்கள் என்றால் மிகத் தெளிவாக ஏசுவை சகோதர்கள் புனிதராக- தீர்க்கராகக் கூட ஏற்கவில்லை என்கிறது சுவிசேஷக் கதை.  

// The very name of the Apostle who is known as Thomas remains obsecure. Thomas is the Greek form of the Aramaic 'Teoma' whose greek translation is Didymas, meangin "Twin" Most probably his original name was Judas, and the parentheses and the versional variants could have been scirbal clarification.
How could an Apostle be known by an epithet or an adjective such as "Twin". //- Person and Faith of Apostle Thomas in the Gospels, George Kaniarakath, CMI; Intercultural Publications- New Delhi

தோமா என்றால் இரட்டையர் - ஏசுவுடன் ஒட்டிப் பிறந்த சகோதரன் - ஏசுவைப் போலவெ இருந்த இரட்டையர்- முழுப்பெயர் யூதா ததேயூ என இருக்கலாம், பார்க்க ஏசு போல இருந்தமையால் தோமா எனவும் அழைத்து இருக்கலாம்; இஸ்காரியோத் என்பதை ஊர் பெயர், ஆயுதம் ஏந்தியவர் எனப் பல ஊகங்கள்.

ஏசுவின் சீடர்கள் யார்- அவர்கள் என்ன ஆனர், எங்கே இறந்தனர் எல்லாமே பிற்கால செவி வழி செய்திகளே, தோமா பற்றிய பதிவில் வாடிகன் போப் அரசர் பதிப்பகம் வெளியிட்ட 'பட்லர்ஸ் லைஃப் ஆஃப் செயின்ட்ஸ்' நூலில் டிசமபர்-21, தோமா நாள் பதிவில் - As with Other Apostles, there are traditions of great unreliablity about his missionaryactivities after the decent ofthe Holy ghost at Perntecost. Page-213 Butler's live of Saints. 1932

ஒரு மனிதன் அந்த பிறவியில் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.

சுவிசேஷக் கதாசிரியர்கள் சீடரை அறியாமல் தானாகக் கதை புனைந்தது தெளிவாக உறுதி ஆகிறது.


Samaritan Gerzim

  Jews who? In India only in 8th or 9th Century CE or Later. Judah - the country and people of  Judah and Israel or called Jews. But when th...