Monday, June 26, 2023

பைபிள் சுவிசேஷக் கதைகளை வரலாறு பேராசிரியர்கள் நிராகரிப்பது ஏன்? - ஏசு கைது கதையும் & சீடர் சேவகர் காது வெட்டிய கதை

ரோமன் அரசு -தனக்கு எதிராக கிளம்பிய யூதர்களின் மேசியா-ராஜா எனச் சொல்லித் திரிந்த ஏசு என்ற மனிதனை மரணதண்டனையில் கொன்றது. இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகம் ஆக்கி வழிபடுவதே கிறிஸ்துவ மதம். 

சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார்,  பொஆ.70 வாக்கில் முதலில் வரைந்த மாற்கு சுவி கதைப்படி கலிலேயாவில் மட்டுமே இயங்கி வந்தார். ஏசு பஸ்கா பண்டிகைக்கு யாவே தெய்வம் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி தர வந்தார். ஏசு கைது செய்யப் பட்டு ரோமன் மரண தண்டனையில் இறந்தார்.கைது போது நடந்தது என்ன?
ஏசுவை கைது செய்தது யார் என மாற்கு சுவிசேஷக் கதை?

 

மாற்கு 14:43 ஏசு  பேசிக் கொண்டு இருக்கும்போதே 12 சீஷர்களுள் ஒருவன் யூதாஸ்; யூதத் தலைமைப் பாதிரியார்களாலும், விவிலிய வல்லுனராலும், மூத்த யூதத் தலைவர்களால் அனுப்பபட்ட ஆயுதம் ஏந்திய சேவகர்களோடு வந்தார்  46 சேவகர்கள் ஏசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 

ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் என்ன செய்தனர்? 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

ஏசுவின் கைது போது நடந்த ஒரு சம்பவம் - சேவகர் காதை வெட்டிய சீடர் கதை. 

மாற்கு 14: 46  காவலர்கள் ஏசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 ஏசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி ஏசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் யூதத்  தலைமை பாதிரியின் வேலைக்காரன்.  

 இந்தக் கதையில் சீடர்கள் ஆயுதம் வாள் வைத்து இருந்தது மிகத் தெளிவாக உறுதி ஆகிறது. 

மத்தேயு - இந்தக் கதையைத் தழுவி வரைந்த போது - ஆயுத சண்டை தவிர்க்க ஏசு சொன்னதாகவும், தான் அழைத்தால் வானில் இருந்து தன்னைக் காக்கப் படை வரும் என்றதாகச் சேர்த்தார்

மத்தேயு 26: 50. யூதாஸூடன் வந்த சேவகர்கள் ஏசுவைப் கைது செய்ய 51  ஏசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் வாளை எடுத்து தலைமைப் பாதிரியின் வேலைக்காரனை வாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.52 ஏசு அச்சீஷனைப் பார்த்து,, “வாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். 53 நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவாரே! 

 இதே கதையை லூக்கா தன் சுவிசேஷக் கதையை வரைகையில் அந்த சேவகன் காதை குணப் படுத்தியதாகக் கதை 

லூக்கா 22:50 சீஷர்களில் ஒருவன் தன் வாளால் யூதத் தலைமைப் பாதிரியின் சேவகன் வலது காதை அவன் வெட்டினான். 51 ஏசு “நிறுத்து” என்று சொல்லி; சேவகன் காதைத் தொட்டு அவனைக் குணப் படுத்தினார்  யோவான் 

2ம் நூற்றாண்டில் வரையப்பட்ட யோவான் சுவிசேஷக் கதாசிரியர் தற்போது அந்த சேவகன் பெயரையும், தன் கத்தியால் காதை வெட்டியது சீமோன் பேதுரு எனவும் கதையை வளர்த்து உள்ளார் 

 யோவான்18: 10 சீமோன் பேதுரு தான் வைத்து இருந்த வாளால் யூதத் தலைமைப் பாதிரியின் சேவகன் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த சேவகன் பெயர் மல்கூஸ்) மாற்கு 14:1 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது விவிலிய வல்லுனரும், தலைமை பாதிரிகளும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். 2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்

இந்தக் காது வெட்டும் கதை ஒன்றில் ஒவ்வொரு கதாசிரியரும் தனக்கு வேண்டியபடி புனைந்து நீட்டியதைக் கண்டோம். 
 மிக முக்கியமான் விஷயம் -பஸ்கா பண்டிகை என்பது - இஸ்ரேல், யூதேயா முழுவ்தும் உள்ள பல ஆயிரம் மக்கள் தாங்கள் ஆடு கொலைப் பலி, காணிக்கை செலுத்த வரும் காலம். 

 மாற்கு 14:1 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது விவிலிய வல்லுனரும், தலைமை பாதிரிகளும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். 2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்

ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயத்தின் சில முக்கிய பகுதி உள்ளே பாது காவல் தவிர மீதம் முழுவதும் ரோமன் படை வீரர்கள் தான், யூதேயா ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து நேரடி ஆட்சி கீழே உள்ள பகுதி. பஸ்கா பண்டிகை போது காணிக்கை வசூல், ஆலயம் பாதுகாப்பதே யூதப் பாதிரிகள் வேலை, அந்த நேரத்தில் காவலர் கூட்டம் அனுப்பவது என்பது இயலாத கற்பனை.  
ஏசுவை கைது செய்தது யார் - யோவான் சுவிசேஷக் கதை?

 யோவான்18: 3  ஏசுவின் சீடர் யூதாஸ் ஏசுவுக்கு எதிராகப் போய், ரோமன் போர் வீரர் படையைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் யூதத் தலைமைப் பாதிரி, பரிசேயர்களால்  அனுப்பப்பட்ட சேவகரையும் அழைத்து வந்தான்.  

யோவான்18: 12 பிறகு ரோமன் போர் வீரரும் ஆயிரம் படை வீரர் தலைவனும் யூதச் சேவகர்களும் ஏசுவைக் கைது செய்தனர். 

 மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில்  விவிலியவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-   “ But John says quiet explicitly that they were accompanied by Roman Troops - "the Cohort" that was stationed in the Antonia fortress (or atleast a substantial part of that Cohort), under the leadership of their Commanding Officer, the "Tribune"(John18:3 &12)".
 நாம் இரண்டு விஷயங்களை அறியலாம்- கைது செய்தது ரோமன் படை வீரர் என்பதை மாற்கு கதாசிரியர் மற்றும் மத்தேயு-லூக்கா கதாசிரியர் வேண்டும் என்றே மறைத்து உள்ளனர்.
யோவான் சுவிசேஷக் கதாசிரியர் மூல கிரேக்கத்தில் உள்ள சொற்களை இன்றும் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் திரித்தே தருகின்றனர்.
நாம் 15 வெவ்வேறு மொழி பெயர்ப்பு தேடியபோது, ரோமன் படை வீரர் எனக் கூறும் சில பதிப்புகள்
 https://www.biblestudytools.com/john/18-12-compare.html
A Great deal of Confusion remains in the Gosple stories and much in them will not bear comparison with established Judicial Practice(Jewish & Roman) of the time..
Many Scholars believe that these elements of the 'story'(Sanhedrin meet, Barnabbas, Herod, etc.,) reflect the Anti-Jewish circles of early Christians, perhaps those in the Hellenistic circles,  and their desire to absolve the Romans from the guilt of the death of their Saviour page-  Page- 454, Pictorial Biblical Encyclopedia
..Many Scholars maintain that by the time Mark and Matthew (Ch.26 &27) wrote their accounts, there was no living witness to what had taken place after Jesus Arrest.// Page- 453 
, Pictorial Biblical Encyclopedia
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-V-II
A Great deal of Confusion remains in the Gosple stories and much in them will not bear comparison with established Judicial Practice(Jewish & Roman) of the time..
Many Scholars believe that these elements of the 'story'(Sanhedrin meet, Barnabbas, Herod, etc.,) reflect the Anti-Jewish circles of early Christians, perhaps those in the Hellenistic circles,  and their desire to absolve the Romans from the guilt of the death of their Saviour page-  Page- 454, Pictorial Biblical Encyclopedia
..Many Scholars maintain that by the time Mark and Matthew (Ch.26 &27) wrote their accounts, there was no living witness to what had taken place after Jesus Arrest.// Page- 453 
, Pictorial Biblical Encyclopedia
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப் பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

No comments:

Post a Comment

Samaritan Gerzim

  Jews who? In India only in 8th or 9th Century CE or Later. Judah - the country and people of  Judah and Israel or called Jews. But when th...