ஏசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில் பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இஸ்ரேலில், பொ.ஆ. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாட்டை ரோமன் ஆட்சி செய்தபோது வாழ்ந்ததாராம். ஏசு தன்னை உலக முடிவில் வரவேண்டிய யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்து மரண தண்டனையில் இறந்தார் என சுவிசேஷக் கதைகள் கூறுகிறது. ஏசு பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. ஏசு மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த அரை நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடுசுவிசேஷக் கதைகள் .
ஏசு பற்றிய கதைகளின் ஒரே தரவு தரும் புதிய ஏற்பாடு ஏசு கதை சொல்லும் சுவிசேஷக் கதைகளீல் ஏடுகள் நம்பகத்தன்மை உள்ளதா என சோதனைகள் மூலம் பார்க்கலாம்.
1. BIBILOGRAPHICAL TEST : பைபிளொகிராபி சோதனை நம்மிடம் எத்தனை சுவடிகள், சொல்லப்படும் நபர்க்கும் சுவடிகளுக்கும் உள்ள இடைவெளி, இதை வைத்து NT-புஏ கதைகள் நம்பிக்கைக்கு உரியதாக புனைகின்றனர். அதாவது புஏ ஏடுகள் ஏசு மரணத்திலிருந்து 100 வருடத்திலிருந்து தெளிவான ஏடுகள் உள்ளதாம், 4ம் சுவிசேஷம் எழுதி 50 ஆண்டிற்கு உள்ளான கோடக்ஸ் பிரதி உள்ளது என்பர் 25000 மேலான சுவடிகள் உள்ளதாம். மழுப்பலாளர் சொல்வது அலக்சாண்டர் திருவள்ளுவரோ, அசோகரோ இவர்கள் பற்றி உள்ள ஏடுகள் அவர்கள் மரணத்திற்கு 1000 வருடம் பின்பு மிகச் சில ஏடுகள் மட்டுமே கொண்டு அவர்களை வரலாற்று நபர் என ஏற்கிறீர்கள். ஆனால் ஏசு பொ.கா.30 வாக்கில் மரணம், 130ஐ சேர்ந்த் பைபிள் ஏடுகள் உள்ளது என்கின்றனர்.
பழமையான ஏடுகள் 127: நாம் NTபுஏ- வின் பெரும்பாலன ஏடுகள் 127, மிகபபழமையானவை, இவை எங்கே உள்ளது எனும் இணையப் பக்கத்தைத் தருகிறோம் . இவை 2ம் நூற்றண்டின் இறுதியில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையிலானது எனப் பட்டியல் உள்ளது, இந்த ஏடுகளில், எந்த் NT-பூஏ புத்தகத்தில் எந்த அதிகாரம் உள்ளது என உள்ளது.இவற்றில் ஒரு ஏடு கூட 27 புத்தகங்களின் ஒரு புத்தகத்தின் முழு ஏடு கிடையாது.
http://en.wikipedia.org/wiki/List_of_New_Testament_papyri
இதில் மிகப் பழமையானது ஏடு பி.52 ஜான் ரைலேண்ட் ஏடாம்- 125 ஆனது என்கிறது. இந்த ஏடின் படம் கீழே ; அது பற்றிய இணைப்பும் தருகிறோம்.
http://en.wikipedia.org/wiki/Rylands_Library_Papyrus_P52
ஒரு கடன் அட்டையினை குறுக்கில் கிழித்த அளவு, முழுமையாக ஒரு வசனம் கூடக் கிடையாது. இந்த ஏட்டின் காலம் பற்றி கருத்து ஒற்றுமை இல்லையாம், தற்போதைய எழுத்தியல் ஆய்வு இந்த ஏட்டின் எழுத்துரு பொஆ 175 - 225 காலத்தது என்கின்றனர்.
இதற்கு அடுத்தது ஆக்ஸ்ரைன்கஸ் ஏடு Papyrus Oxyrhynchus 90 & 104
http://en.wikipedia.org/wiki/Papyrus_90 http://en.wikipedia.org/wiki/Papyrus_104
இதன் காலம் 150 – 200 எனப் படுகிறது. இவை தான் 2ம் நூற்றாண்டின் மிக முக்கிய ஏடுகள்
இந்த ஏடுகள் பைபிள் ஏடு என்பதால் இதை சுவிசேஷப்படி ஆக இருக்கலாம் என ஊகம் ஏற்பு; வேறு புத்தக ஏடு ஆக இருந்தால் இவை நிராகரிக்கப் பட்டு இருக்கும். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத் தன்மை தரவில்லை.
நாம் இந்த சோதனையில் இம்முடிவிற்கு வர மற்ற காரணிகள் இன்னும் எளிமையாக விளக்கும்
2. INTERNAL EVIDENCE TEST : உள்ளே சொல்லபட்டவையின் சோதனை
“One must to the claims of the document under analysis, and not assume fraud or error unless the author disqualified himself by contradictions or known factual inaccuracies”. John W. Montegomery - ஆய்வுக்கு உள்ள பழைய புத்தகம் நேர்மையானது என்பதை ஏற்றே ஆக வேண்டும்- அந்த புத்தகத்தில் முரணான மாறுபாடுகளோ, தெரிந்தபடியான தவறுகள் இருக்கக் கூடாது.
ஏசுவை கைது ஆகி ரோமன் மரணதண்டனையால் இறந்தார். ஆனால் முதல் மூன்று சுவிசேஷக் கதாசிரியர்கள் கைது செய்தது யூத மதத் தலைமை பாதிரி அனுப்பியக் காவலர் என்கிறது.
யோவான் சுவிசேஷம் மூல கிரேக்கத்தின் சரியான மொழிபெயர்ப்புபடி
யோவான்18: 3 ஏசுவின் சீடர் யூதாஸ் ஏசுவுக்கு எதிராகப் போய், ரோமன் போர் வீரர் படையைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் யூதத் தலைமைப் பாதிரி, பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சேவகரையும் அழைத்து வந்தான். யோவான்18: 12 பிறகு ரோமன் போர் வீரரும் ஆயிரம் படை வீரர் தலைவனும் யூதச் சேவகர்களும் ஏசுவைக் கைது செய்தனர். |
மாற்கு 1: 9 கலிலேயாவின் நாசரேத் நகரத்தில் இருந்து ஏசு யூதேயாவின் யோர்தான் ஆற்றில் யோவானிடம் பாவமனிப்பு ஞானஸ்நானம் பெற்றார். |
மாற்கு 1: 14 யோவான் சிறையில் அடைக்கப் பட்ட உடனே ஏசு கலிலேயாவுக்குச் சென்று, நற்செய்தியைப் போதனை தொடங்கினார். |
மாற்கு 14:12. அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைk kolai seythu பலி enath tharuவார்கள். மாற்கு 14:46 புளியாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகை அன்றூ சீடர் உடன் ஏசு இருந்த போது ஏசுவை கைது செய்தனர். |
யோவான் சுவி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடமும் மேலும் சில நாட்களும் என்கிறது. மேலும் ஏசு யூதேயாவிலேயே தான் மூன்று பண்டிகைகள் கூடாரப் பண்டிகை (செப்டம்பர்), மறு அர்ப்பணிப்பு பண்டிகை (டிசம்பர்) பின் பஸ்கா (ஏப்ரல்) எனக் கடைசி எட்டு மாதங்கள் யூதேயாவில் கழிந்தது. ஏசு சீடரோடு இயங்கும் போது ஒரு முறை யோவன் ஞானஸ்நானகர் வழியில் வருவதாக ஒரு சம்பவம். அதாவது ஏசு சீடர் சேர்த்து இயக்கம் ஆரம்பித்தபின்பு தான் யோவான் கைது ஆனார் என்கிறது.
இதை பைபிள் அறிஞர் தெளிவாக உறுதி செய்கிறார். -If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned. The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார், “Where as Synoptic record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.
ஏசுவின் முதன்மை சீடர் பேதுரு சீடர் ஆனது எங்கே?
ஏசுவின் முதன்மை சீடர் எனப் பவுல் கடிதம் கூறும் பேதுரு சீடர் ஆனதை மாற்கு சுவியும் மற்றும் மத்தேயு, லூக்கா சுவி கதைகளும் கூறுவது
ஏசுவின் முதன்மை சீடர் பேதுரு சீடர் ஆனது எங்கே?ஏசுவின் முதன்மை சீடர் எனப் பவுல் கடிதம் கூறும் பேதுரு சீடர் ஆனதை மாற்கு சுவியும் மற்றும் மத்தேயு, லூக்கா சுவி கதைகளும் கூறுவது
மாற்கு 1: 16 ஏசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் சென்ற போது மீன்பிடிப்பவர்கள் சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். 17 ஏசு,இனி நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடியுங்கள் என்றிட. 18 சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு ஏசுவைப் பின் சென்றனர். |
மத்தேயு21: 23 ஏசு ஜெருசலேம் யூத யாவே தெய்வ ஆலயத்திற்குள் போதனை செய்த போது, தலைமைப் பாதிரிகளும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். இயேசுவிடம்,, “இந்த போதனை செய்ய உனக்கு என்ன அதிகாரம்? யார் கொடு |
மாற்கு 14: 53 அவர்கள் வை யூதத் தலைமைப் பாதிரியிடம் கூட்டிச் சென்றார்கள். யூத மத சங்க அனைத்து தலைமைக் பாதிரிகளும் மூப்பர்களும் விவிலிய அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். 55 யூதத் தலைமைப் பாதிரிகளும், யூத மத தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். |
ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாட்கள்- தெரியாது.
3 சுவிகள் ஒரு வருடம் என்கிறது, மேலும் ஏசுவின் மரணத்திற்கு 40 வருடம் பின்பு முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி ஏசு கதைப்படி, கலிலேயாவை சேர்ந்த ஏசு, யூதேயாவின் எல்லையோர வனாந்திரப் பகுதியில் யோவன் ஞானஸ்நானகரிடம் பாவமன்னிப்பு பெற்ற உடன், யோவான் கைதாகிட பாவமன்னிப்பு -ஞானஸ்நானம் யோவானிடம் பெற்றார், யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே தன் சீடர்களை சேர்த்து இயங்கி கடைசி வாரம், யூத மதப் புராணக் கதைப்படி, அப்பாவி எகிப்தியரின் முதல் குழந்தகளை கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம், யூதர்களின் சிறு கடவுள் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலி தர வந்தபோது கைது செய்யப்பட விசாரணைக்குபின் மரணம். அதாவது ஏசு பிறப்பிலிருந்து மரணம் வரை யூதர் தான்.
கலிலேயாவை ஆண்டது ஏரோது, யூதேயாவை ஆண்டது ரோமன் ஆட்சியில், எதற்காக மாற்கு – மத்தேயூ – லூக்கா மூன்று சுவிகளும் கடைசி 7 – 8 மாதங்கள் யூதேயவில் உள்ளதை சொல்லவில்லை. வேறு அரசியல் காரணம் உண்டா தெரியாது. ஆனால் ஏசு படி
லூக்கா 16:10 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். |
மத்தேயுவின்படி ஏசுவின் தந்தை பெதெலஹேமை சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 40வது தலைமுறை)
லூக்காவின் சுவி கதைப்படி ஏசுவின் தந்தை நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறை)
மத்தேயுவின் ஏசு பெரிய ஏரோதின் மரணத்திற்கு 2 வருடம் முன்பு, அதாவது பொ.மு. 6ல் பிறந்திறக்கலாம்.
லூக்காவின் சுவி கதைப்படி ஏசு, ரோமன் ஆட்சியின் கீழாக சிரியா கவர்னர் கிரேனியூ கீழ் யூதேயா வந்த போது மக்கள் திகை கணக்கெடுப்பின்போது அதாவது, பொ.கா. 8ல் பிறந்திருக்கலாம்.
இந்த ஏடுகள் பைபிள் ஏடு என்பதால் இதை சுவிசேஷப்படி ஆக இருக்கலாம் என ஊகம் ஏற்பு; வேறு புத்தக ஏடு ஆக இருந்தால் இவை நிராகரிக்கப் பட்டு இருக்கும். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத் தன்மை தரவில்லை.
இது போலே மேலும் 50க்கும் அதிகமான முரண்பாடுகள், இவற்றை அடுத்தக் கட்டுரையில் (சுவிசேஷம் உருவான கதை) காணலாம்
3. EXTERNAL EVIDENCE TEST: வெளியே ஆய்வின் சோதனை
இது இஸ்ரேலின் நாடு அமைப்பு, புதை பொருள் ஆய்வு முடிவுகள் இவை புதிய ஏற்பாட்டோடு பொருந்துகிறதா எனப் பார்ப்பதாம்.
நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53 – 58; மாற் 6:1 – 6) லூக்கா 4:16 16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார்.28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார். |
நாசரேத் கதை முழுதும் கட்டுக் கதை. நாசரேத்தி அகழ்வு ஆய்வ்களை சரியானபடி விஞ்ஞான ஆய்வு பற்றிய ஒரு வலை இதோ
மத்தேயு சுவியில் கண்டால்
மத்தேயு 2:21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் ஏரோது அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ‘ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. |
இப்படி ஒரு வசனம் – ஏன் நாசரேத் என்னும் சொல்லே பழைய ஏற்பாட்டில் கிடையாது. தீர்க்கம் நிறைவேறியதாம்.
According to the Jewish historian, Josephus (Antiquities of the Jews), John was executed because he had criticised the marriage of Herod Antipas to his own brother’s wife, who divorced her husband in order to marry him. Since the marriage took place in 34 CE, it appears that Josephus is giving John’s death as occurring no earlier than approximately 36 CE, which was later than the crucifixion of Jesus.
Now the Jews had an opinion that the destruction of this army was sent as a punishment upon Herod, and a mark of God’s displeasure to him. This association makes it most likely that John’s death was a quite recent event at the time of the defeat – closer in time to the battle than to the wedding, and certainly not something that occurred 8 or 10 years earlier. |
சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும் (மத் 22:15 – 22; லூக் 20:20 – 26)
ஆ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம் சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு இல்லை
நடு நிலையாக தேடுவோருக்கு பைபிளின் பழைய ஏடுகளோ, இருக்கும் முரண்பாடுகளும் வரலாற்று பிழைகளும் புதிய ஏற்பாடு சிறிதும் நம்பிக்கைக்கும் உரியது இல்லை எனபது தெளிவாகிறது.
No comments:
Post a Comment