Thursday, June 8, 2023

கிறிஸ்துவ மத வளர்ச்சி வரலாறு - ஏசு காரணம் இல்லையே?

கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை

ஏசு எனும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன்; ரோமன் கவர்னர் மரணதண்டனையில் பொஆ.30 வாக்கில் இறந்தார் எனவும்; ஏசு மரணம் பின்பு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு காட்சி தர, சீடர்கள் புதிய மதம் தொடங்கியதாகக் கதை அப்போஸ்தலர் நடபடிகள் (பொஆ.2ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இயற்றியது) கூறுகிறது. இந்த அ.நட. நூலை எழுதியது 3ம் லூக்கா சுவிசேஷக் கதாசிரியரே.

அப்போ1:15 ..ஏறக்குறைய 120 சகோதர- சகோதரிகள் ஒரே இடத்தில் கூடி ருக்கும் போது பேதுரு  எழுந்து நின்று பேசியது  
அப்போ2:41 பேதுரு பேசியதைக் கேட்டு அன்றைக்கு சுமார் 3,000 மக்கள் ஞானஸ்நானம் பெற்று சர்ச் சேர்ந்தனர்
அப்போ4:4 ஜெருசலேம் ஆலயத்தின் அருகே தங்கி சீடர்கள் பேச்சைக் கொண்டு சர்ச் சேர்ந்த ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய 5000. 
லுக்கா சுவிசேஷக் கதாசிரியர் சொன்ன இந்தக் கதை வைத்து என்னிடம் உள்ள வெளிநாட்டு, இந்திய மழுப்பலாளர் பொஆ.100 வாக்கில் 10 லட்சம் மக்கள் கிறிஸ்துவர் ஆனர் என கதைத்து உள்ளனர். 
பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள் -Rodney Stark, The Rise of Christianity (1996)
W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005), Ramsey MacMullen, Christianizing the Roman Empire etc., 

நாம் ஸ்டார்க் அனுமானத்தைக் காண்போம், 19- 20ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கூட்டங்களில் பங்கு பெற்றவர் எண்ணிக்கை கூறியதை முடிந்தவரை சரி பார்த்து, லூக்காவும் அதே போல தன்னிச்சையாக கதைத்தார் எனக் கொண்டார். அதன் பின்னர் பல்வேறு ஊகம் கொண்டு பொஆ.30ல் இறந்த ஏசு பற்றி மிகத் தீவிரமாக பிரச்சாரத்தினால் ஆரம்ப வேகத்தில் 40ம் ஆண்டு வாக்கில் 1000 பேர்   கிறிஸ்துவ சர்ச் சேர்ந்து இருக்கலாம்.  ஸ்டார்க் 20 நூற்றாண்டில் அமெரிக்காவில் அரசு ஆதரவு இல்லாமல் வளர்ந்த ஓரிரு Morman கிறிஸ்துவ சர்ச் & ஹரேகிருஷ்ணா வளர்ச்சி வேகங்களை கணித்து, அதே போல கிறிஸ்துவமும் முதல் 300 ஆண்டுகளில் 4% ஆண்டிற்கு வளந்து இருக்க வேண்டும் என அனுமானம் செய்தார். 
வாடிகன் சர்ச் வரலாற்று பேராசிரியர் - பொஆ.325 நிசின் பிஷப் மாநாட்டில் கலந்ஹ்டு கொண்ட எண்ணிக்கை, பன்னாட்டு பல்கலைக் கழக சமூகவியல் அறிஞர் கருத்துபடி ஒரு பேராயர் கட்டுப்படுத்து சர்ச் என்பதைக் கொண்டு  ஸ்டார்க் அனுமானம் 4% மிக மிக அதிகம் அதன்படி பொஆ 300 வாக்கில் 30 லட்சம் கிறிஸ்துவர் என்பது, 325இல் சர்ச் உறுப்பினரைவிட பலமடங்கு அதிகமாக உள்ளது. எனவே சர்ச் வளர்ச்சி வேகம் 2.5என்றார். 
 பொஆ.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 4000 மக்கள் க்குட கிறிஸ்துவம் ஏற்கவில்லையே - அதாவது 0.00065% மொத்த 6 கோடியில்.  இந்த மாற்றம் வர அதிசயம்- தூய பேய்(ஹோலி கோஸ்ட்) தேவையே இல்லை என சமூகவியல் ஆய்வாளர் மற்றும் சர்ச் வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர்.
நாம் ஸ்டார்க் வருடத்திற்கு 4%  என்ற விகிதத்தில் சராசரியாய் (இது மாறும்) கொண்டால் 40 பொ.கா. 1000 மக்கள் கொண்ட கிறிஸ்துவ சர்ச். 100 பொஆ வாக்கில் வரை 7530 கிறிஸ்துவர் இருந்திருக்கலாம் எனில் அதுவும் 0.001% மட்டுமே .
பவுல் கடிதங்களில் சர்ச் பற்றிய விபரங்கள் மற்றும் ன்னாட்டு பல்கலைக் கழக விவிலிய பேராசிரியர்கள் கருத்தை-இந்த பன்மத வரலாறு நூல் சுருக்கமாக விளக்குகிறது
அப்போஸ்தலர் நடபடிகள் புராண நூல் கதையில் ஸ்தேவான் கொலக்குப் பிறகு - ஏசு மரணதண்டனையில் இறந்து சில ஆண்டுகள் பின்பு செயல்
அப்போ11:19 ஸ்தேவான் கொல்லப்பட்ட ஜெருசலேம் சர்ச் விசுவாசிகள் வெளியேறினர். பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற தூரமான இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் சுவிசேஷத்தை இங்கு எல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள்.
  ஏசு மரணதண்டனையில் இறந்து 30 ஆண்டுகள் பின்பு 
அப்போ 21: 23 ஏசுவின் (உடன் பிறந்த) சகோதரர் யாக்கோபு மற்றும் சர்ச் மூப்பர்கள் -பவுலை நோக்கி, “சகோதரரே, நீங்கள் செய்ய வேண்டியது-எங்களோடு இருப்பவரில் 4 பேர் ஜெருசலேம் யாவே தெய்வத்திற்கு நேர்ந்து உள்ளனர்.  24 நீங்களும் பரிகாரமாக  ஜெருசலேம் தெய்வ ஆலயத்தை சுத்தம் செய்யுங்கள்; இந்த    4 பேர் இஸ்ரேலின் தெய்வமான யாவேவிற்கு ஜெருசலேம் ஆலயத்தில் மொட்டை - முடி காணிக்கை செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்   
ஏசு மரணதண்டனையில் இறந்து 30 ஆண்டுகள் பின்பும் இஸ்ரேல்ன் யாவே தெய்வ வழிபாடு செய்பவர்களாகவும், மோசே சட்டப்படி வாழ்ந்தும்; அதை பவுலை செய்யச் சொன்னதாகக் கதை.  
ஏசுவை தெய்வீகர் எனப் பரப்பும் கிறிஸ்துவ மதமாற்ற வியாபாஇர்கள் - சுவிசேஷக் கதையின்படி ஏசுவின் பரலோகம் எதற்கு

ஏசு சுவிசேஷக் கதைகளின்படியே தான் அமைக்கும் பரலோகம் என்பது யூதர்களுக்கு மட்டுமே எனவும், 12 அப்போஸ்தலர் யூத 12 ஜாதிகளை மேய்ப்பர் என்றார்.

மத்தேயு 19:28 சு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனித குமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள்.  நீங்கள்      12 அரியணைகளில்  அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்.

இது நல்ல சமாரியன் கதை இடைச்செருகல் செய்த லூக்காவிலும் உள்ளது
லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள்.

ஏசுவின் பரலோக ராஜ்ஜியம் யூதர்களுக்கு மட்டுமே 

பவுல் முதலில் யூதர்களை நோக்கியும், பிறகு கிரேக்கர் யூதர் அல்லாதவர் இடையேயும் மத வியாபாரம் செய்து காசு பண்ணிடவும், உலகம் தன் வாழ்நாளில் அழியும் என்ற போதனையுமே செய்தார். ஆனால் பவுல் கடிதங்களுக்கு பின்பான வெளிப்படுத்தின விசேஷங்கள் கதையில் 


வெளி 21: 12 ஏசுவின் புதிய ஜெருசலேம் தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு ஜாதிகளின் ஒரு ஜாதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஏசுவின் பரலோகத்தில் யூத ஜாதி 12ல் இருந்து பெண்ணை தொடாத 1,44,000 ஆண்களுக்கு மட்டுமே

கிறிஸ்துவம் வளர்ச்சி வாள் பலத்தால் நிகழ்ந்தது 
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டில் மக்கள் தொகை 6 கோடி,   325 வாக்கில் 1% மக்கள் கிறிஸ்துவர்கள் எனச் சர்ச் வரலாற்று அறிஞர் கருத்து கண்டோம். ரோமன்மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு; ரோமன் ஆட்சியின் வால் பலம் வர  அடுத்த 50 ஆண்டுகளில் இது  5 கோடியைத் தொட்டது. 
1கொரிந்தியர்1:26  சகோதர சகோதரிகளே, நீங்கள் சேர்ந்த போது, சமூக நிலையில் உங்கள் டையே கல்வி பெற்ற அறிஅவாளிகள் இல்லை; சமூகத்தில்  பெரிய செல்வாக்கு  பெற்றவர் இல்லை. மதிப்பு மிக்க உயர்ந்த குடியில் இருந்து வரவில்லை. 
 சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார். 
  அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை. கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 

No comments:

Post a Comment

Samaritan Gerzim

  Jews who? In India only in 8th or 9th Century CE or Later. Judah - the country and people of  Judah and Israel or called Jews. But when th...