ரோமன் அரசு -தனக்கு எதிராக கிளம்பிய யூதர்களின் மேசியா-ராஜா எனச் சொல்லித் திரிந்த ஏசு என்ற மனிதனை மரணதண்டனையில் கொன்றது. இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகம் ஆக்கி வழிபடுவதே கிறிஸ்துவ மதம்.
சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார், பொஆ.70 வாக்கில் முதலில் வரைந்த மாற்கு சுவி கதையின் 5-6ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகள் எல்லாமே 16:8 என்ற வசனத்தோடு முடிகிறது. நாம் முக்கியமாக 7-8ம் வசனம் பார்ப்போம்.
வெள்ளி அன்று மாலை செத்துப் போனதான ஏசுவின் பிண உடல் கல்லறையில் அடக்கம் செய்தனராம், சனிக்கிழமை (கர்த்தர் ஓய்வு நாள்) விட்டு அத்த 2ம் நாள் ஞாயிறு காலை அன்று ஏசு இயக்கம் சேர்ந்த சில பெண்கள் இறந்த ஏசுவின் பிண உடலுக்கு வாசனை தைலங்கள் தடவச் சென்றபோது மாற்கு 16:7 கல்லறையில் இருந்த வெள்ளை உடை வாலிபன் " ஏசுவின் சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். ஏசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கு இருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி* நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான். 8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. * refer that Jesus saying below |
இக்கதை தான் இறந்த மனிதன் ஏசு இறந்தார் எனப் பட்ட பிறகு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு காட்சி தந்ததான கதைகளின் ஆரம்ப நிலை.
//*ஏசு உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி* நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்”//
மாற்கு 14:28 ஏசு தன் சீஷர்களிடம்," மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கே இருப்பேன்” என்றார். |
5 - 6ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து கிரேக்க மாற்கு மூல ஏடுகளில் இறந்த ஏசு மீண்டும் பழைய உடம்பில் காட்சி ஏதும் இல்லை, ஆனால் கலிலேயாவில் காட்சி தருவதாக் தான் கைது ஆவேன் என்ற போதே சொன்னதாகக் கதை.
இறந்த ஏசு மீண்டும் பழைய உடம்பில் காட்சி கதைகளைக் கூறும் மற்ற சுவிசேஷங்களில் ஏசு சொன்ன இவ்வசனம் உள்ளதா காண்போம். நாம் மத்தேயு சுவிசேஷக் கதையில் இறந்த ஏசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுந்து சீடருக்கு காட்சி கதை கலிலேயாவில் (28:16-17) மட்டுமே
மத்தேயு 26: 32 ஏசு தன் சீஷர்களிடம் நான் இறந்தபின், மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கே இருப்பேன்” என்றார். |
நாம் லூக்கா சுவிசேஷக் கதையை முழுவதும் ஆராய்ந்தால் -இறந்த ஏசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுந்து சீடருக்கு காட்சி கதை ஜெருசலேமில் மட்டுமே , இறந்த 2ம் நாள் ஞாயிறு அன்றே ஏசு பெத்தானியாவில் இருந்து பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்ட்தாகக் கதை
இயேசு பரலோகத்திற்குத் செல்லுதல் லூக்கா 24: 50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்கள் இடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் ஆலயத்தில் தங்கி இருந்தார்கள். |
லூக்கா கதாசிரியர் காட்சிகளை ஜெருசலேமில் மட்டுமே வைத்ததால் - ஏசு தன் கைது பற்றி முன்பே சொன்னார் எனும் புனைக் கதையில் 22:14 - 38 முழுவதிலும் கலிலேயா சென்று அங்கே காட்சி என்பது சொல்லவே இல்லை
யோவான் 4ம் சுவிசேஷக் கதையில் இரவு உணவு என்பது இல்லை - ஆனால் தன் கைதை முன்பே கூறியதாக உள்ள 13ம் அத்தியாயத்தில் நிச்சயமாக கலிலேயா செல்லுவேன் என்பது சொல்லப் படவே இல்லை.
பிற்கால யோவான் சுவி - 2ம் நூற்றாண்டில் காட்சிகளை ஆரம்பத்தில் ஜெருசலேமில் தான் எனக் கதைச் செய்ததோடு - பிற்கால சொருகலாக சேர்ந்த கடைசி அதிகாரத்தில்; ஏசுவை தெய்வீகர் என ஏற்ற சீடர்கள் ஏசு இறந்தபின், பழைய உடம்பில் உயிரோடு ஜெருசலேமில் காட்சிக்கு பின்பும் மீண்டும் கலிலேயாக் கடற்கரை வந்து பழைய மின் பிடி தொழிலை செய்தபோது கலிலேய ஏரியில் காட்சி மற்றும் மீன் பிடி அதிசயம் கதைகள் சேர்த்தனர்.
லூக்கா 5:4 ஏசு போதித்து முடித்து; சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்... 6 மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. 7 பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவ; இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின. |
கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் போது ஏசு அதிசயம் செய்ததைப் பார்த்து தான் பீட்டர் சீடர் ஆனார் என்பது லூக்கா(5:1-10) சுவிசேஷக் கதை
The Conviction of Jesusby a Roman Governor and his death by a Roman form of Capital Punishment – Crucifixion were facts about the accounts of Jesus given by the Christians. They were an embarrassment to those who sought to stop the Roman Persecution of Christianity. This may well have influenced the way in which the Trials of Jesus were presented to the readers of the gospels. The Council of Jews, the Sanhedrin, was described as morally responsible for the sentence of death pronouncement by Roman Governor. But Pilate may well have been influenced by alleged intention to destroy the Temple – Page:127. Who’s Who in the NT |
மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51ஏசுவைப் பின் தொடர்ந்து மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக ஓடினான். |
No comments:
Post a Comment