அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது?
மாற்கு3:7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். |
மாற்கு3:13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘ இடியைப் போன்றோர் ‘ எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். –18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். |
மாற்கு | மத்தேயு | லூக்கா |
பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன் | பேதுரு என்னும் சீமோன் | பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன் |
செபதேயுவின் மகன் யாக்கோபு | சீமோன் சகோதரர் அந்திரேயா | சீமோன் சகோதரர் அந்திரேயா |
யாக்கோபின் சகோதரரான யோவான் | செபதேயுவின் மகன் யாக்கோபு | யாக்கோபு, , |
அந்திரேயா | யாக்கோபுசகோதரர் யோவான் | யோவான் |
பிலிப்பு | பிலிப்பு | பிலிப்பு |
பர்த்தலமேயு | பர்த்தலமேயு | பர்த்தலமேயு |
மத்தேயு | தோமா | மத்தேயு |
தோமா | வரி தண்டினவராகிய மத்தேயு | தோமா |
அல்பேயுவின் மகன் யாக்கோபு | அல்பேயுவின் மகன் யாக்கோபு | அல்பேயுவின் மகன் யாக்கோபு, |
ததேயு | ததேயு | தீவிரவாதி எனப்பட்ட சீமோன் |
தீவிரவாதியாய் இருந்த சீமோன் | தீவிரவாதியாய் இருந்த சீமோன் | யாக்கோபின் மகன் யூதா |
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து | இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து | துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து |
லூக்கா 5: 1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ‘ ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ‘ என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ‘ ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ‘ என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ‘ ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ‘ என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ‘ அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ‘ என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். |
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ‘ இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ‘ என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். 40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ‘ மெசியாவைக் கண்டோம் ‘ என்றார். ‘ மெசியா ‘ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, ‘நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்’என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள். |
முதல்- முக்கியமான சீடரான பேதுரு
லூக்கா –கலிலேயா ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் செய்ததால் சேர்ந்தார் எனக் கதை.
யோவான் சுவியோ யோர்தான் ஆற்றங்கரையில் ஞானஸ்நானி யோவான் சொன்னதால் சேர்ந்ததாகக் கதை.
பேதுரு இயேசுவிடம் சேர்ந்தவிதமே தெரியாது. இரண்டில் ஒன்று பொய்? அல்லது இரண்டுமே பொய்? ஏன் மாற்றினார் எதோ ஒரு சுவிசேஷக்–கதாசிரியர்?
|
ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் இயேசு செய்தல் யோவான் சுவிசேஷத்தில் இயேசு உயிர்த்து எழுந்தபின்னர் எனப் புனையப் படுகின்றது
யோவான் சுவிசேஷத்தில் நத்தனியேல் என ஒரு சீஷர்.
வரிவசுலிக்கும் மத்தேயு என மாற்கு – லுக்கா சுவிசேஷங்களில் கிடையாது.
மத்தேயு9:9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ‘ என்னைப் பின்பற்றி வா ‘ என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். |
நத்தனியேல் யார் தெரியாது? பர்த்தலமேயு அவர் தான் என்பதற்கு ஆதாரமே கிடையாது
லூக்கா –யாக்கோபின் மகன் யூதா- யார் தெரியாது?
மாற்கு–மத்தேயுவின் ததேயு- லூக்காவின் யாக்கோபின் மகன் யூதா என்பதற்கு ஆதாரமே கிடையாது
பிற்பாடு உள்ள கடிதங்கள் இரண்டு
யாக்கோபு பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jas&Cn=1
பின் யூதா பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jude&Cn=1
யூதா1:1 இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
இரண்டு கடிதத்தையும் இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் (கிழே) எழுதியது என்பது சர்ச்
சிடர்களாக இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் இருக்க முடியுமா?
யூதா என்னும் பெயரில் மூவர் உள்ளனர்.
1.யூதாசு இஸ்காரியோத்து
http://www.answering-christianity.com/abdullah_smith/crucifixion_of_judas.htm
இஸ்லாமியர்படி யூதாசு இஸ்காரியோத்து இயேசு போல தோற்றம் உள்ளவர். இவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இல்லை.
2. யூதா என்னும் ததேயு
http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle
sometimes identified with Jude, “brother of Jesus”
http://www.catholiccompany.com/blog/saint-jude-thaddeus-surprisingly-popular-saint
As you know Saint Jude Thaddeus, according to tradition, looked like Jesus Christ!
3.மூன்றாவது நபர் தோமா என்பவர்- இவர் முழுப்பெயர் யூதா தோமா, ஏசுவோடு ஒரே பிரவசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்கிறது, தோமா நடபடிகள் கதை, இக்கதைப்படி உயிர்த்த ஏசு அடிமை வியாபாரியாக மாறி கோந்தபோரஸ் என்ற மன்னனின் ஆளிடம் 30 வெள்ளிக் காசிற்கு விற்றார். யூதா தோமா அவர் பக்கத்து நாடான மன்னன் மசடாய் பாலைவன நாட்டில் அரச வீரர்களால் கொல்லப்பட்டார்.
புதிய ஏற்பாடு எழுதிய கதாசிரியர்களுக்கு இயேசுவைத் தெரியாது.அதனால் தான் கதை இவ்வாறு உள்ளது