இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?
இயேசு எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு பிறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
ஏசு எனும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன்; ரோமன் கவர்னர் மரணதண்டனையில் பொஆ.30 வாக்கில் இறந்தார் எனக் கதை. ஏசு பற்றிய அனைத்து கதை செய்திகள் தருவது கிரேக்க புதிய ஏற்ப்டு புராணம் மட்டுமே. அதிலும் சுவிசேஷம் (நல்ல கதை) என நான்கு கதாசிரியர் எழுதியவைகளில் தான் நாம் ஏசு பற்றிய கதைகளைக் காண்கிறோம்.
ஏசு இறந்து 40 ஆண்டு பின்பு முதலில் இயற்றப்பட்ட மாற்கு (70 - 80) சுவி கதையில் ஏசு பிறப்பு கதைகள் இல்லை. ஆனால் ஏசுவுடன் 4 சகோதரர்களும், சில சகோதரிகளும் உண்டும் எனவும், தாயார் பற்றி உள்ளது; ஏசுவின் தந்தை சீடரோடு இயங்கிய காலக் கதை சம்பவங்களில் இல்லாதமையால் அவர் பொஆ 30 முன்பே இறந்து விட்டார் என அறிகிறோம்
இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?
பொ.மு. முதல் நூற்றாண்டில் பெரிய ஏரோது இஸ்ரேலை ரோமிற்கு கீழாக ஆண்டு வந்தான். மரணம் பொ.மு. 4 இல்.
மத்தேயு 2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' மத்தேயு 2:16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். |
மத்தேயூ சுவி புனையும் கதைப்படி பெரிய ஏரோது காலத்தில் ஏசு பிறந்தார். ஏசு ஜோதிடர்கள் பெத்லஹெம் சென்று திரும்பாததால் 2 வயதுக் குழந்தைகளை கொன்றார் எனக் கதை. அதாவது ஏசு பொ.மு. 6 இல் பிறந்திருக்க வேண்டும்.
மத்தேயு 2: 19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலாயு தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. |
பெரிய ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு யூதேயா பகுதிக்கும், ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
சரி லூக்கா புனையும் கதைக்கு வருவோம்.
லூக்கா 2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. 2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். 6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். |
Jesus was born before the death of Herod(4BCE), whereas the only Census known in the period took place 10 -13 years later, while Qurinius was Roman Governor of Syria. Ths has suggested the alternative theory that Jeus was Galilean, was born in Nazareth, the story of birth in, 'David City' of Bethlehem being developed to justify the claim that it fulfilled the Prophecy of Micah(5:12-15) that the Messiha was to issue from the House of David. Page-449, Pictorial Biblical Encyclopedia
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜொசப் மகனாக ஏசு பொ.மு. 6இல் பிறந்தார். | லூக்கா கதைப்படி நாசரேத்தில் ஆழ்ந்த ஏலி மகன் ஜொசப் மகனாக ஏசு பொ.கா. 6இல் பிறந்தார். |
மத்தேயுவின் ஏசுவிற்கு 13- 14 வருடம் பின்பு லூக்காவின் இயேசு பிறந்தாராம்.
கதை நாயகர் இயேசுவை, தாவீது பரம்பரையினர் எனக் காட்ட மத்தேயு 1:1-144லிலும், லூக்கா 3:23-38லும் புனைந்து தரப் பட்டுள்ளது.
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகனாக ஏசு பொ.மு. 6இல் பிறந்தார். இவர் ஆப்ராகாமிலிருந்து 41ஆவது தலைமுறை | லூக்கா கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகனாக ஏசு பொ.கா. 6இல் பிறந்தார். இவர் ஆப்ராகாமிலிருந்து 57ஆவது தலைமுறை |
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் மத்தேயுவின் 41ஆவது தலைமுறை யாக்கோபு மகன் பெத்லஹேமின் ஜோசப் மகனான இயேசுவிற்கு 400 ஆண்டுகள் பின்பு லூக்காவின் ஏலி மகன் நாசரேத்தில் வாழ்ந்த ஜோசப் மகனான ஏசு பிறந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment