அப்போஸ்தலர் பவுல் யார்??
கூடாரம் கட்டும் தொழில் செய்தவர்
அப்போஸ்தலர் 18:1 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். 2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்து கொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான். |
பவுல் ஒரு ரோமன் குடிமகன்
அப்போஸ்தலர் 22 : 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான். 26அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளை இடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான். 27அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் ரோமன் குடிமகன்” என்றான். 29. பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமன் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான். |
யூத மதப் பாதிரிகள் விசாரணை சங்க உறுப்பினர்-சதுசேயர்
அப்போஸ்தலர் 26: 9 நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். 10 இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமை பாதிரிகளிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். (அப்போஸ்தலர் 5: 17 தலைமை பாதிரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.) |
யூத மதப் பாதிரியாகும்படி விவிலியம் கற்ற பரிசேயன்
அப்போஸ்தலர் 22 :3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். |
பிலிப்பியர் 3: 5 நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன்.6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை. |
இந்த நாலில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கலாம், அல்லது நான்குமே பொய்யாக இருக்கலாம்.
1கொரிந்தியர் 15:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது மரன தண்டனையில் சிலுவையில் இறந்த கிறிஸ்து கதையை. இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். |
ஏசு எந்த அதிசயமும் செய்யவில்லை, அவர் மீது தான் தீர்க்க தரிசனம் நிறைவேறியது என்பதும் இல்லை என மேலுள்ள வசனம் உறுதி செய்கிறது
ஏசுவிடம் பவுல் பெற்றதாகப் பரப்பிய தெய்வீக போதனை
1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். |
1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில் மரணம் அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம் |
யூத மோசே சட்டப்படி அவரவர் பாவத்திற்கு அவரவர்கள் தான் சாக முடியும்
உபாகமம் 24.16 “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலை செய்யப் படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும். |
மனிதர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள்
பவுல் ஜெருசலேம் வந்து யாக்கோபு, பேதுர் மறும் மூர்களிடம் கடிதம் வாங்கி சென்றதாகக் கதை
23 அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். 25 நாங்கள் பர்னபா, பவுல் ஆகியோரை
உங்களிடம் அனுப்புகிறோம். 26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 28 நீங்கள் செய்ய வேண்டியவை விஐயே, வேறு சுமை உங்கள் மேல் சுமத்தவில்லை. 29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதி இருந்தார்கள்.
30யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.
யோபு 25:4 மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணின் யோனியில் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்? 6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்! |
பவுலுடைய அடிப்படை நம்பிக்கை தன் வாழ்நாளின் உலகம் அழியும் என, அதனால் திருமணம் செய்து கொள்ளதவர்கள் இனிமேல் திருமணம் அவசியமில்லை என்கிறார்.
1 கொரி 7:29 சகோதர சகோதரிகளே, இந்த பூமி உலக முடிவின் கர்த்தரின் நியாயத் தீர்பு நாள் மிக அருகில் உள்ளது.இப்போது முதல் திருமணம் ஆகி மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். |
No comments:
Post a Comment