ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் என்ன செய்தனர்?
மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51ஏசுவைப் பின் தொடர்ந்து மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக ஓடினான். |
பவுல் எழுதிய 7 கடிதங்களே புதிய ஏற்பாடு புராணங்களின் முதலில் வரையப்பட்டவை.
1கொரிந்தியர் 15:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது மரன தண்டனையில் சிலுவையில் இறந்த கிறிஸ்து கதையை. இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். |
1கொரிந்தியர் 15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: விவிலியத்தில் எழுதி உள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4 அடக்கம் செய்யப்பட்டார். விவிலியத்தில் எழுதி உள்ளவாறே 3ம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார். 8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். |
பவுல் இறந்தபின் ஏசுவின் காட்சி கண்டு பெற்ற செய்திப் படி உலகம் அவருடைய வாழ்நாளில் அழியும் என்பதை அழகாக விளக்கியும் உள்ளார்
கலாத்தியர் 1:12 நான் இந்த நற்செய்தியை எந்த மனிதனிடம் இருந்து பெறவில்லை. யாரும் கற்பிக்கவில்லை. ஏசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். |
1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். |
1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில் மரணம் அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம் |
மத்தேயு11:13 ஏசு- நியாயப்பிரமாணம் & தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா |
லூக்கா7: 27 ' ஏசு- இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என யோவானைப் பற்றித்தான் விவிலியக் கதை நூலிகளில் எழுதப்பட்டுள்ளது. |
மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசிகளும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் நடக்கவிருந்த செயல்களை உரைத்தன. |
லூக்கா16: 16 மோசே சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். |
மல்கியா4:1 “நியாயத் தீர்ப்புக்கான காலம் வருகின்றது. இது ஒரு வெப்பமான சூளை போன்றது. தற்பெருமையுடைய ஜனங்கள் எல்லாம் தண்டிக்கப் படுவார்கள். தீயவர்கள் எல்லோரும் வைக்கோலைப்போல் எரிக்கப் படுவார்கள். அதிலுள்ள கிளையோ, வேரோ விடுபடாமல்போகும்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார். 5 கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான். |
யோவேல்1:15துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய நாள் அருகில் இருக்கிறது. எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும் |
யோவேல்2:30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு, அடர்ந்த புகை போன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும். சந்திரன் இரத்தமாக மாற்றப்படும். பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.” சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள். |
மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன். 24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானில் உள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். மாற்கு 13:30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். |
1கொரிந்தியர் 1: 26 சகோதர சகோதரிகளே, நீங்கள் இணைந்த நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதச் சமுதாய வாழ்வில் உங்களுள் அறிவாளிகள் எத்தனைபேர்? வலிமையானோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? |