Monday, July 31, 2023

பவுல் காட்டும் ஏசுவும், சுவிசேஷக் கதைகளும்- பழைய ஏற்பாடு கதைகளை மனிதக் கற்பனை- பாட்டி கதை என்கிறதே?

வரலாற்று ஏசுவை பைபிளில் தேடுவோம்.

கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும்.

 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொண்டு 22 எல்லா வகை தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

ஏசு மரணதண்டனையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக.

பவுல் எழுதிய 7 கடிதங்களே புதிய ஏற்பாடு புராணங்களின் முதலில் வரையப்பட்டவை. 

1கொரிந்தியர் 15:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது மரன தண்டனையில் சிலுவையில் இறந்த கிறிஸ்து கதையை. இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.  
ஏசு எந்த அதிசயமும் செய்யவில்லை, அவர் மீது தான் தீர்க்க தரிசனம் நிறைவேறியது என்பதும் இல்லை என மேலுள்ள வசனம் உறுதி செய்கிறது.

ஆனால் பவுல் - ஏசுவை மனிதராக தாவீதின் பரம்பரையில் வந்தவர் எனவும் கூறி உள்ளார்; இது பழைய ஏற்பாட்டு கதைகளில் யாவே தேவன் கதாபாத்திரம் - தாவீதிடம் இஸ்ரேலின் ஆட்சி சிம்மாசனம் உன் குடும்பத்திடமே என்றும் இருக்கும் என்பதனாலே ஆகும்.

லூக்கா 16:16  “மோசேயின் சட்டங்களும் தீர்க்கர்கள் கூற்றும் யோவான்ஸ்நானர் காலம் வரையிலும் தான்.அதுமுதல், தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் நுழைய வன்முறையாக பலர் முயல்கிறார்கள். 


1 தீமோத்தேயு  6:20  திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுக்களிலிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு. 21அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக!

1 தீமோத்தேயு  4:7 உலகப் போக்கிலான புனைகதைகளையும் பாட்டிக் கதைகளையும் விட்டுவிலகு.

1 தீமோத்தேயு 1: 3 உன்னை எபேசு நகரில்   மாற்றுக் கொள்கைகளைக் போதிப்பதை செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு. 4 அவர்கள் புனைகதைகளிலும், முன்னோரின்  முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்குப் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகின்றன.

தீத்து 1:14   யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.

தீத்து 3:9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற முன்னோர் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, மோசேயின் சட்டங்களைக் குறித்து சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பயன் அற்றவை, வீணானவை.

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...