ஏசு: ரோமன் அரசு -தனக்கு எதிரான யூதர்களின் மேசியா(கிறிஸ்து-ராஜா) என ஒரு சிறு கும்பலைச் சேர்த்துக்கொண்டு இயங்கிய -ஏசு என்ற மனிதனை கைது செய்து, விசாரணை செய்து ரோமன் மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்தார் எனச் சுவிசேஷக் கதைகள் காட்டுகின்றன.
இறந்த மனிதன் ஏசுவுடைய சீடர் இல்லாத பவுல் என்பவர் இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகம் ஆக்கி வழிபடுவதைத் தொடங்கிய கிறிஸ்துவ மதம். கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் ஏசுவைப் பற்றிய அனைத்து கதைகள், செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஆதாரம் மதம் பரப்ப கிரேக்க மொழியில் வரைந்த புதிய ஏற்பாடு மதத் தொன்மக் கதைகள் மட்டுமே.
இறந்த மனிதன் ஏசுவை யூதர்களின் கிறிஸ்து (ஹீப்ரு-மேசியா- ராஜா) என்பதாகவும் அவரை யூதப் புராணக் கதையின் தாவீது ராஜா பரம்பரையில் பிறந்தவர் எனவும் பவுல் கூறி உள்ளார்.
ரோமர் 1:4 ஏசு ஒரு மனிதனாக தாவீதின்(Spherma- விந்தணுவில்) குடும்பத்தில் பிறந்தார். பவுல் இந்தக் நம்பிக்கையின் அடிப்படை என்பது எபிரேயப் புராணக் கதை வழியாக இஸ்ரேல் ஆட்சியின் அரச உரிமை
|
மாற்கு 14: 12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள், 16 .. சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர். 17 மாலையில் 12 சீஷர்களோடு இயேசு பஸ்கா. 18. உணவு உண்டார். |
சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார், பொஆ.70 வாக்கில் முதலில் வரைந்த மாற்கு சுவி கதையின்படி- கலிலேயாவைச் சேர்ந்த ஏசு 90மைல் நடந்து யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார். யோவான் கைதாகிவிட கலிலேயா திரும்பி வந்து அங்கு சீடர்களை சேர்த்துக் கொண்டு இயங்கினார். அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்கு ஒரு யூதனாக(எபிரேய பைபிள் புராணக் கதையில் எகிப்தில் முதல் குழந்தைகளைக் கொன்றதற்கு நன்றி கூற) ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் தெய்வமான யாவே-கர்த்தர் இருக்கும் ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி தர வந்த போது கைது செய்யப்பட்டார்.
யூதர்களின் மேசியா - கிறிஸ்து என்றால் என்ன
யூதர்களில் முக்கிய பதவி ஏற்பு போது வாசனை எண்ணெய் தடவுவது பதவி ஏற்பு நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நிகழ்வு. அது பதவி ஏற்கும் அந்த மனிதன் அப்பத்விக்கு தேர்வு ஆகிவிட்டவன் என்பதை உறுதி செய்யும். இந்த எண்ணெய் தடவுதல் யூதர் ராஜா, யூத ஆலயப் பாதிரி மற்றும் படைத் தலைவன் எனப் பல பதவி ஏற்பிலும் நடைபெறுவது என உள்ளது.
தாவீதிடம் கர்த்தர் கூறியதாக 1சாமுவேல்10:1சாமுவேல் எண்ணெய் தைலக் குப்பியை எடுத்து, சவுல் தலை மீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் அரசவனாக இருக்கும்படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார்". |
1 சாமுவேல் 16: 3 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து தாவீது மேல் அவன் சகோதரர் முன்னிலையில் ஊற்றினார். |
யூத மத தெய்வம் யாவே ஆலயப் பாதிரி பணிக்கும்
யாத்திராகமம் 29:41 உன் சகோதரன் ஆரோனையும் அவன் மகன்களையும் ஏபோத்து துணி உடுத்துவாய். அவர்கள் மீது விசேஷ எண்ணெயை ஊற்றி தூய்மைப் படுத்து. அவர்கள் எனக்கு சேவை செய்யும் பாதிரிகளாக இருப்பார்கள். |
இஸ்ரேல் ராஜா மட்டும் இல்லை சிரியா ராஜாவிற்கும் மற்றும் தீர்க்கர் எல்லா பதவிக்கும் எண்ணெய் தலையில் ஊற்றுவர்
1 ராஜாக்கள் 19:15 எலியாவிடம் - கர்த்தர், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் போ, அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக தலை மேல் எண்ணெய் ஊற்று, 16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூ தலை மேல் எண்ணெய் ஊற்று. பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக ஆக்க தலை மேல் எண்ணெய் ஊற்று. |
இஸ்ரேலை அடிமைப் படுத்திய பாரசீக அரசன் கோரேசும் எண்ணெய் ஊற்றப்பட்டபடி தேர்ந்து எடுக்கப்பட்டவர் தான்
45:1 கர்த்தர் தன்னால் எண்ணெய் ஊற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசு பற்றி “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக் கொள்வேன். அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். ASV Isaiah 45:1 Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him |
மேலே பார்த்த எல்லாமே மனிதப் பதவிகள் மட்டுமே. யூத எபிரேய புராண நம்பிக்கையில் தெய்வம் மனிதனாக வருவது கிடையாது, இஸ்ரேலிற்கான தெய்வம் பெயரை வாயால் சொல்லவே கூடாது என்பது பத்து கட்டளைகளில் ஒன்றும் ஆகும். இன்னும் சொல்லப் போனால் தேவ குமாரர்கள் மனிதப் பெண்களை அனுபவித்து ராட்சதர்களை உருவாக்கியதாகக் கதை உள்ளது.
பவுல் தான் தொடங்கிய தெய்வீகக் கிறிஸ்து கற்பனை மதத்தை யூதர் அல்லாத கிரேக்கர்களிடம் கொண்டு சென்று பெரும் பணம் சம்பாதித்தார் என அவர் கடிதங்கள் காட்டுகின்றன, இதை விரிவாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஹயம் மேக்கோபி தெளிவாகக் காட்டி உள்ளார்.
பவுல் தெய்வீகப் புனையல் கிறிஸ்து நம்பிக்கையின் வேர்
பவுல் இந்த கர்த்தரின் நாளில் எப்படி என்ன நடக்கும் என்றது
1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில் மரணம் அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம் |
ஏசுவிடம் பவுல் போதனை பெற்றதாகக் கதை
1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். |
பவுல் மதமும்- ஜெருசலேமில் வாழ்ந்த ஏசு சீடர்கள் மதமும்
ஜெருசலேமில் யாக்கோபு, பேதுருவைச் சந்தித்து செல்லும் போது
அப்போஸ்தலர் 16:3 பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான். |
யாக்கோபு & மூப்பர்கள் பவுலிற்கு கொடுத்த கட்டளை (ஏசு மரணத்திற்கு 30 வருடம் பின்பு)
பவுல் யாக்கோபைச் சந்தித்தல் அப்போஸ்தலர் 21: 18 பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். 23. யாக்கோபு & மூப்பர்கள் பவுலிடம் எனவே நீங்கள் செய்ய வேண்டியதை கூறுகிறோம்- எங்களுடன் உள்ள நான்கு பேர் தேவனுக்கு ஒரு பொருத்தனை நேர்த்தி செய்கின்றனர். 24இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். |
No comments:
Post a Comment