Friday, July 7, 2023

ஏசு பற்றிய சுவிசேஷக் கதை இயற்றிய கதாசிரியர்கள் வெற்று பொய்யர்கள்

பொஆ 30 வாக்கில் ரோமன் மரண தண்டனையான தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்தவர்.

ஏசுவை கைது செய்தது யார்

ஏசுவின் கைது பற்றி முதலில் வரைந்த மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் 
பொஆ.70-80 இடையே (செவி வழி கதைகள் அடிப்படையில்) புனைந்தது.
மாற்கு சுவிசேஷக் கதையை அடிப்படையாக வைத்து மேலும் பல செவி வழி கதை அடிப்படையில் பொஆ 80- 90 மத்தேயுவும், பொஆ 90 - 110 இடையே லூக்காவும் இயற்றிய கதைகள்.
மாற்கு சுவிசேஷக் கதை அறிந்தும் தனி நடையில் எழுந்த 4ம் சுவி; பொஆ 100 - 125 இடையே இயற்றப்பட்ட யோவான் சுவிசேஷம் மூல கிரேக்கத்தின் சரியான மொழிபெயர்ப்புபடி 

 யோவான்18: 3  ஏசுவின் சீடர் யூதாஸ் ஏசுவுக்கு எதிராகப் போய், ரோமன் போர் வீரர் படையைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் யூதத் தலைமைப் பாதிரி, பரிசேயர்களால்  அனுப்பப்பட்ட சேவகரையும் அழைத்து வந்தான்.  

யோவான்18: 12 பிறகு ரோமன் போர் வீரரும் ஆயிரம் படை வீரர் தலைவனும் யூதச் சேவகர்களும் ஏசுவைக் கைது செய்தனர். 

 
21ம் நூற்றாண்டில் தொடரும் கிறிஸ்துவ மோசடி மொழி பெயர்ப்புகள்

மிகத் தெளிவாக யோவான் சுவிசேஷக் கதாசிரியர் பயன்படுத்திய மூல கிரேக்கச் சொல் ரோமன் படையைக் கூறும்  -இன்று பெரும்பாலான சர்ச் பயன்படுத்தும் தமிழ் & ஆங்கிலம் பைபிள் மொழி பெயர்ப்பு KJV, NIV, RSV etc., எதிலும் ரோமன் என்ற சொல் இல்லவே இல்லை.

பொஆ 6ம் ஆண்டு பஸ்கா பண்டிகை போது நடந்த கலவரத்தை ஏரோது ஆர்சிலேயு சரியாக அடக்கவில்லை என ரோம் தன் கீழ் யூதேயாவைக் கொண்டு வந்த பின்னர் - யூத யாவே தெய்வ ஆலய சில முக்கிய பகுதிக்கு தவிர யூதர்களுக்கு காவலரே கிடையாது.


மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில்  விவிலியவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்  தன் நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-   “But John says quiet explicitly that they were accompanied by Roman Troops- "the Cohort" that was stationed in the Antonia fortress (or atleast a substantial part of that Cohort), under the leadership of their Commanding Officer, the "Tribune"(John18:3 &12)".
 நாம் இரண்டு விஷயங்களை அறியலாம்கைது செய்தது ரோமன் படை வீரர் என்பதை மாற்கு கதாசிரியர் மற்றும் மத்தேயு-லூக்கா கதாசிரியர் வேண்டும் என்றே மறைத்து உள்ளனர்
யோவான் சுவிசேஷக் கதாசிரியர் மூல கிரேக்கத்தில் உள்ள சொற்களை இன்றும் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் திரித்தே தருகின்றனர்.
நாம் 15 வெவ்வேறு மொழி பெயர்ப்பு தேடியபோது, ரோமன் படை வீரர் எனக் சில பதிப்புகள் NASB-New American standard BibleComplete Jewish Bible, Good News Bible, The Message Bible- கூறுவது மக்களுக்கு உண்மையை விளக்கும் 
 https://www.biblestudytools.com/john/18-12-compare.html

 மாற்கு 14: 53 அவர்கள் ஏசுவை யூதத் தலைமைப் பாதிரியிடம் கூட்டிச் சென்றார்கள். யூத மத சங்க அனைத்து தலைமைக் பாதிரிகளும் மூப்பர்களும் விவிலிய அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். 

55 யூதத் தலைமைப் பாதிரிகளும், யூத மத தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். 

யூத யாவே தெய்வ ஆலய முக்கியப் பகுதி மற்றும் யூதத் தலைமைப் பாதிரிகள் பாதுகாப்பு தவிர யூதர்களிடம் காவலர்களே கிடையாது.யூத பஸ்கா பண்டிகை போது அனைத்து இஸ்ரேலியரும் ஜெருசலேம் வந்து இஸ்ரேலிற்கான யாவே தெய்வம் உள்ள ஒரே ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலி தரவும், ஆண்டு காணிக்கை தரும் நேரம், பல ஆயிரம் இஸ்ரேலிய மக்கள் கூடும் அன்றைக்கு, யாவே தெய்வ ஆலயப் பணி மிக முக்கியம். யூதர்களின் மிகப் புனிதமான பகுதி உள்ளே யூதர் அல்லாத ரோம் படை வீரர் அனுமதி இல்லை, (ஆனால் லூக்கா 13:1- 5ல் கலிலேயப் புரட்சியாளரை அடக்கி கொன்று பிலாத்து பரிசுத்த ஸ்தல யாவே தகன பலி ரத்தத்தோடு கலந்தான் என்கிறது) .
 யூத ஆலயப் பாதுகாப்பும், தங்கள் வருமானம் பெறவும் பஸ்கா பண்டிகை போது அன்றைய பணி; அன்று 71 பேர் கொண்ட முழுமையான யூத மதப் பாதிரிகள் மத சங்கம் அனைத்து உறுப்பினரோடு ஏசுவை விசாரித்தது என்பதன் உளறலை நேர்மையான சிந்திக்கும் அனைவரும் உணரலாம்.
சுவிசேஷக் கதைகளின் மூல கிரேக்கத்தில் உள்ளபடி ஏசு கைது- மரணதண்டனை பற்றிய முழு ஆய்வு நூல்கள்- மிகத் தெளிவாக சுவிசேஷக் கதாசிரியர்கள் கட்டுகதைகள் அக்காலத்திய யூத & ரோமன் சட்ட நீதி விசாரணை நடைமுறையோடு பொருந்தவில்லை என்பதை சுட்டினர். 

இன்றைய நிலையில் பன்னாட்டு பல்கலைக் கழக விவிலிய வரலாற்று அறிஞர் கருத்து ஒற்றுமை 
 The  Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital Punishment- Crucifixion, were facts about the account given by the Christians. They were an embarassment to those who want to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the readers of the Gospels. The council of Jews, the Sanhedrin, was described as morally responsibe for the sentence of death pronouncement by the Roman Governor. -Page 243 Who's Who in the New Testament (with Nihil obstate& Imprimatur)
Gospel accunt of Mark reflects the undeniable fact that Jesus was Convicted by the Roman Authority representedby Pilate. This fact was of some embarassment to Christian probaganda through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible, but the form and exectuion of the Punsihment was Roman's and responsiblity of Pilate. -Page 243 Who's Who in the New Testament (with Nihil obstate& Imprimatur)

A Great deal of Confusion remains in the Gosple stories and much in them will not bear comparison with established Judicial Practice(Jewish & Roman) of the time..

Many Scholars believe that these elements of the 'story'(Sanhedrin meet, Barnabbas, Herod, etc.,) reflect the Anti-Jewish circles of early Christians, perhaps those in the Hellenistic circles,  and their desire to absolve the Romans from the guilt of the death of their Saviour -  Page- 454, Pictorial Biblical Encyclopedia(highly respected Editor & his other books

..Many Scholars maintain that by the time Mark and Matthew (Ch.26 &27) wrote their accounts, there was no living witness to what had taken place after Jesus Arrest.// Page- 453, Pictorial Biblical Encyclopedia.
லூக்கா 16:10 ஒருவன் சிறிய விஷயங்களில் நேர்மையாக இருந்தால் அவனை பெரிய விஷயங்களிலும் 
சுவிசேஷக் கதாசிரியர்கள் - ரோமன் கவர்னர் ஆணை போட்டு ரோம் படை ஏசுவைக் கைது செய்து - ரோமன் விசாரணை- ரோமன் மரணதண்டனை என்பதில் கட்டுக் கதை மோசடி சேர்த்தனர்; இன்றைய சர்ச் யோவான் சுவிசேஷத்தில் (யோவான் 18:3, 12) மூல கிரேக்க வார்த்தை ரோமன் படை, மற்றும் ஆயிரம் படை வீரர் தலைவரைக் குறித்தாலும் மோசடியாக தராமல் தடுப்பதும் அருவருப்பாக உள்ளது

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...